Aran Sei

கடந்த 12 ஆண்டுகளில் 254 லட்சாதிபதிகள் ஐக்கியக் குடியரசில் குடியேறியுள்ளனர் – ஆன்டி கரப்சன் சாரிட்டி தகவல்

நீரவ் மோடி - Image Credit : business-today.in

டந்த 2008 ஆம் ஆண்டிலிருந்து 2020 வரை இந்தியாவைச் சேர்ந்த 254 லட்சாதிபதிகள் ஐக்கியக் குடியரசில் குடிபெயர்ந்துள்ளதுள்ளதாக அந்நாட்டைச் சார்ந்த ஆன்டி கரப்சன் சாரிட்டி தெரிவித்துள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

இவர்கள் அனைவரும் “கோல்டன் விசா” என்றழைப்படும், அந்நாட்டில் முதலீடு செய்ததின் வாயிலாக அந்த நாட்டிற்கு குடியேற வழிவகை செய்த 2008 ஆம் ஆண்டின் உத்தரவுக்குப் பிறகு குடியேறியுள்ளதாக அந்த செய்தி கூறுகிறது.

அரண்செய் சிறப்பிதழ் – ஏழு தமிழர் விடுதலை

பகுதி 1 (முதலீட்டாளர்கள்) முன்நுழைவுச் சீட்டு(விசா) வழியாக அந்நாட்டில் குடியேறியவர்களின் பட்டியலில் இந்தியா 7 இடத்தில் உள்ளதாகவும், அதிகப்பட்சமாக சீனாவைச் சேர்ந்த 4,106 பேர் குடியேறியுள்ளதாகவும் தி இந்து செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ரஷ்யா (2,526), ​​ஹாங்காங் (692), அமெரிக்கா (685), பாகிஸ்தான் (283), கஜகஸ்தான் (278) ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் குடியேறியுள்ளதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிறுநீர் அருந்தச்சொல்லி இளைஞரை துன்புறுத்திய உதவி ஆய்வாளர் – நடவடிக்கை எடுக்கக் கோரி தலித் அமைப்புகள் போராட்டம்

இதுகுறித்து “முறையற்ற பணமும் சிவப்புக் கம்பள வரவேற்பும்” என்ற தலைப்பில் வெளியாகியுள்ள அறிக்கையில்,”கோல்டன் விசாவின் வழியாக பணம் படைத்தவர்கள் ஐக்கியக் குடியரசில் பதிவு செய்யப்பட்ட நிறுவனத்தில் முதலீடு செய்வதன் வழியாக உடனடியாக குடியேற அனுமதிக்கிறது. மேலும், உடனடியாக 2 மில்லியன் பவுண்ட் முதலீடு செய்யக்கூடியவர்கள் ஐக்கிய குடியரசில் மூன்று ஆண்டுகள் குடியேறவும்,பின்னர் இரண்டு ஆண்டுகள் அதை நீடிக்கவும் வழிவகை செய்கிறது” என்று சுட்டிக்காட்டியுள்ளதாக தி இந்து செய்தியில் கூறப்பட்டுள்ளது.

பெற்றோர் சம்மதத்துடன் இஸ்லாமியரை மணக்க இருந்த இந்துப் பெண் – இந்துத்துவ அமைப்புகளின் எதிர்ப்பால் நிறுத்தப்பட்ட திருமணம்

இந்தியாவால் தேடப்படுகிற வைர வியாபாரி நீரவ் மோடி கடந்த 2015 ஆம் ஆண்டு இது போன்றதொரு முதலீட்டாளர் விசாவின் மூலமாக அங்கு குடியேறியதாகவும், தற்போது லண்டன் உயர்நீதிமன்றத்தில் இந்தியா அவரை ஒப்படைக்கக் கோருவதற்கு எதிராக வழக்கு நடத்தி வருவதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்