Aran Sei

டெல்லி மருத்துமனையில் 25 கொரோனா நோயாளிகள் உயிரிழப்பு – 2 மணிநேரத்திற்கு தேவையான ஆக்சிஜன் மட்டுமே உள்ளதாக தகவல்

டெல்லி கங்கா ராம் மருத்துவமனையில் கடந்த 24 மணி நேரத்தில் 25 கொரோனா நோயாளிகள் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால்உயிரிழந்துள்ளனர் என மருத்துவமனை தெரிவித்துள்ளது. இன்றைய காலை 8 மணி நிலவரப்படி 2 மணி நேரத்திற்கு தேவையான ஆக்சிஜன் மட்டுமே கையிருப்பு இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மருத்துவமனை இயக்குனர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”கடந்த 24 மணி நேரத்தில் 25 நோயாளிகள் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் உயிரிழந்துள்ளனர். மேலும் தற்போதையை கையிருப்பை வைத்து இன்னும் 2 மணி நேரத்திற்கு மட்டுமே சமாளிக்க முடியும். வென்டிலேட்டர்கள் மற்றும் பைபாஸ் கருவிகள் சரியாக வேலை செய்யவில்லை. இது மிகப்பெரிய பிரச்சினை. 60 நோயாளிகளின் உயிர் ஆபத்தில் உள்ளது. உடனடி உதவி தேவைப்படுகிறது” என தெரிவித்துள்ளார்.

’கடன் வாங்கியோ, பிச்சை எடுத்தோ, திருடியோ ஆக்சிஜனை உறுதி செய்ய வேண்டியது உங்கள் பொறுப்பு’ – மத்திய அரசுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு

மேலும் மருத்துவமனை நிர்வாகிகள் அளித்த தகவலின்படி, கங்கா ராம் மருத்துவமனையில் மொத்த 510 கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் 142 நோயாளிகள் ஆக்சிஜன் தேவைப்படும் அளவிற்கு மோசமான நிலையில் உள்ளனர்.

Source : ANI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்