Aran Sei

கொரோனாவால் இந்தியாவில் 25 கோடி குழந்தைகளின் கல்வி பாதிப்பு – யுனிசெஃப் அறிக்கை

கொரோனா பெருந்தொற்று மற்றும்  ஊடரங்கின் காரணமாக, 2020 ஆம் ஆண்டில் இந்தியாவில் 15 லட்சம் பள்ளிகள் மூடப்பட்டதால், 24.7 கோடி குழந்தைகளின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளதாக, ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம் (யுனிசெஃப்) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் 16.8 கோடிக்கும் அதிகமான குழந்தைகளுக்களுக்கான பள்ளிகள் கடந்த ஒரு ஆண்டாக முழுவதும் முடப்பட்டிருப்பதாகவும், அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் நான்கு குழந்தைகளில் ஒருவருக்கு மட்டுமே டிஜிட்டல் சாதனங்கள் மற்றும் இணைய இணைப்பு வசதிகள் இருப்பதால், ஆன்லைன் கல்வி என்பது அனைவருக்கும் ஏற்றதாக இல்லை என்று அந்த அறிக்கை கூறியுள்ளது.

கொரோனா தடுப்பூசி சான்றிதழில் மோடியின் படம் – தேர்தல் விதிமுறை மீறல் என திரிணாமுல் புகார்

கொரோனாவிற்கு முந்தைய இந்தியாவில், கால்வாசி குடும்பங்களுக்கு (24%) மட்டுமே இணைய வசதி இருந்தது என்றும், அதிலும் கிராமப்புற-நகர்ப்புற மற்றும் பாலின வேறுபாடு உள்ளது என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“இந்தியா முழுவதும் கொரோனா காரணமாக ஒரு ஆண்டாக பள்ளிகள் மூடப்பட்டிருப்பது குழந்தைகளின் வழக்கமான நடவடிக்கைகளைப் பாதித்துள்ளது. நீண்ட நாட்கள் குழந்தைகள் பள்ளியிலிருந்து விலகி, அதிக பாதிப்புக்குள்ளாவதோடு, பள்ளிக்குத் திரும்புவதற்கான வாய்ப்புகளைக் குறைக்கும் என்பதை நாங்கள் அறிவோம். பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கான முடிவு குழந்தைகளின் சிறந்த நலன்களை மனதில் கொண்டு எடுக்கப்படுகிறது. அவர்கள் தவறவிட்ட கற்றலை, அவர்கள் பெறுவதற்கு ஆதரவளிக்க நாங்கள் பாடுபட இருக்கிறோம்” என்று யுனிசெஃப் அமைப்பின் இந்திய பிரதிநிதி டாக்டர் யாஸ்மின் அலி ஹக் தெரிவித்துள்ளார்.

முன்களப்பணியாளர்கள் தாக்கப்படுவதில் இந்தியா முதலிடம் – மருத்துவப்பணியாளர் கூட்டமைப்பு தகவல்

மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பிற பள்ளி ஊழியர்களின் வழக்கமான கை கழுவுதல் மற்றும் பாதுகாப்பான சுகாதார நடைமுறைகளை ஊக்குவித்தல் மற்றும் பள்ளிகளின் சுகாதாரம் ஆகியவற்றை வலியுறுத்துவதன் மூலம், பாதுகாப்பாக பள்ளி மீண்டும் திறக்க, தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்.சி.இ.ஆர்.டி) தயாரித்த வழிகாட்டுதல்களை கல்வி அமைச்சகம் இறுதி செய்துள்ளது.  போதுமான பொருட்கள் மற்றும் வசதிகள் மற்றும் உடல் ரீதியான சமூக இடைவெளிகள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது என்றும் யுனிசெஃப் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Source: PTI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்