Aran Sei

மகாராஷ்டிரா ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரியை திரும்ப பெறுங்கள் – மத்திய அரசிடம் ஆளும் சிவசேனா கோரிக்கை

காராஷ்டிரா ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி ஆளும் பாஜகவின் வழியைப் பின்பற்றுகிறார் என்றும் அரசியல் சாசனத்தை நிலைநிறுத்த விரும்பினால், ஆளுநரை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்றும் மகாராஷ்டிரா ஆட்சியில் அங்கம் வகிக்கும் சிவசேனா தெரிவித்துள்ளது.

மகா விகாஸ் அகாதி (எம்விஏ)வின் குற்றச்சாட்டு நிலையானது மற்றும் வலுவானது என வலியுறுத்திய சிவசேனா, மாநில அரசைக் குறிவைக்க ஆளுநரை, மத்திய அரசு பயன்படுத்தக் கூடாது என்றும் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், “ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி மீண்டும் செய்திகளில் இடம்பெறத் தொடங்கியிருக்கிறார்”.

மண்டிகளின் வருமானம், மூன்றில் ஒரு பகுதியாக குறைந்தது – இடத்தை வாடகைக்கு விட மத்திய அரசு முடிவு

நீண்ட காலமாக அரசியலில் இருக்கும் கோஷ்யாரி.  மத்திய அமைச்சராகவும், உத்திரகாண்ட் மாநில முதல் அமைச்சராகவும் இருந்தவர். மகாராஷ்டிராவின் ஆளுநராக கோஷ்யாரி பொறுப்பேற்றதிலிருந்து, செய்திகளிலும், சர்ச்சையிலும் இடம்பெறுகிறாரென சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னா கூறியிருக்கிறது.

”தற்போது ஏன் எப்போதும் சர்ச்சையில் சிக்குகிறார் என்ற கேள்விக்கு. சமீபத்தில் அரசு விமானத்தைப் பயன்படுத்துவது தொடர்பாகச் செய்தியில் வந்தார். டெஹ்ராடூனிற்கு செல்ல இருந்த ஆளுநர், அரசு விமானத்தின் மூலம் செல்லவிரும்பினார். ஆனால் அரசு இதற்கு அனுமதி மறுத்திருந்தது. வியாழக்கிழமை (பிப்ரவரி 11) அவர் டெஹ்ராடூன் செல்ல அரசு விமானத்தில் அவர் ஏறியபிறகும், விமானம் பயன்படுத்த அரசு அனுமதி வழங்கவில்லை. இதனால் விமானத்திலிருந்து இறங்கிய ஆளூநர் தனியார் விமானம்மூலம் டெஹ்ராடூன் சென்றார்” என சாம்னாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கப்படும் – நாடாளுமன்றத்தில் அமித் ஷா வாக்குறுதி

இந்தப் பிரச்னையைப் பாஜக பெரிதுபடுத்த  முயலவில்லை. ஆனால் அரசு விமானத்திற்கு அனுமதி வழங்காத நிலையில்,  ஆளூநர் ஏன் விமானத்தில் அமர்ந்தாரென சிவசேனா கேள்வி எழுப்பியுள்ளது.

சட்ட விதிமுறைகளின்படி தனிப்பட்ட பயணங்களுக்கு அரசு விமானத்தைப் பயன்படுத்த முடியாது, ஆளுநருக்கு மட்டுமல்ல மாநில முதலமைச்சருக்கும் இதே விதிமுறை தான். சட்டப்படியே நடவடிக்கை  எடுக்கப்பட்டது என முதலமைச்சர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

”மகாராஷ்டிரா அரசு தன்முனைப்புடன் செயல்படுவதாக எதிர்கட்சி தலைவர் தேவேந்திர பட்நாவிஸ் குற்றம்சாட்டுகிறார். யார் தன்முனைப்புடன் செயல்படுகிறார்கள் என நாட்டிற்கே தெரியும். டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்தில் 200க்கும்  மேற்ப்பட்ட விவசாயிகள் உயிரிழந்த பிறகும், சட்டங்களைத் திரும்பப் பெற மத்திய அரசு தயாராக இல்லை. யார் தன்முனைப்புடன் இருக்கிறார்கள்” என சிவசேனா கேள்வி எழுப்பியுள்ளது.

பிரதமர் வருகையையொட்டி ‘ட்ரெண்ட்’ ஆகும் #GobackModi – ட்ரெண்டில் பங்கேற்ற நடிகை ஓவியா

தனது ஒதுக்கீட்டிலிருந்து சட்டமன்றக் குழுவிற்கு நியமனம் செய்ய மாநில அமைச்சரவை பரிந்துரைத்த 12 பெயர்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்குவதில் தாமதம் ஏற்படுத்தி வருவதாக சிவசேனா விமர்சித்துள்ளது.

”ஆளுநர் ஒரு கைப்பாவையாகச் செயல்படுகிறார்” என்றும், “இந்திய அரசியல் சாசனம், சட்டம் மற்றும் விதிமுறைகளை நிலை நிறுத்த உள்துறை அமைச்சகம் விரும்பினால், ஆளுநரைத் திரும்பப் பெற வேண்டும்” என சிவசேனா கூறியுள்ளது.

 

Source: PTI

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்