Aran Sei

பிரதமர் வருகையையொட்டி ‘ட்ரெண்ட்’ ஆகும் #GobackModi – ட்ரெண்டில் பங்கேற்ற நடிகை ஓவியா

பிரதமர் மோடி நாளை சென்னை வர உள்ள நிலையில், ட்விட்டரில் கோபேக் மோடி (#GobackModi) எனும் ஹாஷ்டாக் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

நாளைக் காலை 11.30 மணிக்கு சிறப்பு விமானம், சென்னை விமான நிலையம் வந்தடையும் மோடி, அங்கிருந்து ஹெலிகாப்டர்மூலம் ஐ.என்.எஸ் அடையாறுக்குச் சென்று அங்கிருந்து கார்மூலம் நேரு உள்விளையாட்டரங்கத்தை சென்றடைகிறார். 12 மணி அளவில் சென்னை மெட்ரோ ரயில் வண்ணாரப்பேட்டை- விம்கோ நகர் வழித்தடத்தைத் தொடங்கி வைக்கும் அவர், மேலும் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.

‘போக்சோ’ வழக்கில் சர்ச்சைக்குரிய தீர்ப்பு வழங்கிய நீதிபதி – பதவிக்காலத்தைக் குறைத்து உச்ச நீதிமன்றம் நடவடிக்கை

நாளைச் சென்னை வரும் பிரதமர் மோடிக்கு எதிராக சமூக வலைதளங்களில் கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன. இந்நிலையில், நடிகை ஓவியா தன் டிவிட்டர் பக்கத்தில், #GobackModi எனும் ஹாஷ்டாக்கை பயன்படுத்தி, பிரதமர் மோடியின் தமிழக வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதேபோல், ஓவியர் ட்ராட்ஸ்கி மருது தனது பேஸ்புக் பக்கத்தில், கோபேக் மோடி என்ற வாசகத்துடன் கூடிய கேளிச்சித்தரம் ஒன்றை வரைந்து பதிவிட்டுள்ளார்.

 

இதேபோல், சமூக வலைதளங்களில், கோபேக் மோடி (#GobackModi)  என்ற அந்த ஹாஷ்டேக்கை பயன்படுத்தி, பலரும் கருத்து தெரிவித்து வருவதால், தற்போது அது ட்விட்டரில் ட்ராண்ட் ஆகிவருகிறது.

அந்த ஹாஷ்டேக்கின் கீழ், பல்வேறு விதமான கேளிச்சித்திரங்களை வரைந்தும், மீம்ஸ்களை உருவாக்கியும் மோடியின் வருகைக்கு, நெட்டிசன்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

கடந்த காலங்களிலும், பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வந்தபோது கோபேக் மோடி (#GobackModi) என்ற ஹாஷ்டே ட்ராண்ட் ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்