Aran Sei

கள்ளச்சந்தையில் விற்கப்படும் ரெம்தேசிவிர் மருந்துகள் – பறிமுதல் செய்து காவல்துறை நடவடிக்கை

சென்னையில் கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு ரெம்தேசிவிர் மருந்து விற்பனை செய்த 24 பேரை சென்னை காவல் துறை கைது செய்துள்ளது.

சென்னையில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழலில் மருந்துகளை கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்கும் நபர்களை பிடிக்க சென்னை மாநகர காவல் ஆணையர், அனைத்து காவல் கண்காணிப்பாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழகக் கோவில்களை தணிக்கை செய்ய வேண்டும் – சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜக்கி வாசுதேவ் பொதுநல மனு

இந்நிலையில், மருந்துகளை கள்ளச்சந்தையில் விற்றவர்களிடமிருந்து 243 ரெம்தேசிவிர் மருந்துகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், அதில் 78 மருந்துகள் மீண்டும் மருத்துவப் பயன்பட்டுக்கு திரும்ப அளிக்கப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள மருந்துகளை திருப்பி அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கைது செய்யப்பட்ட 24 பேரின் மீதும் 11 வழக்குகள் பதியப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

source; the hindu

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்