Aran Sei

கர்நாடகாவில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 24 பேர் மரணம் – சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உறவினர்கள் போராட்டம்

ர்நாடக மாநிலம் சாமராஜாநகர் பகுதியில், உள்ள அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக கொரோனாவினால் பாதிக்கப்பட்ட 24 பேர் உயிரிழந்துள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், ஆக்சிஜன் பற்றாக்குறையால் 24 பேர் உயிரிழந்ததில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள்மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டுமென இறந்தவர்களின் குடும்பத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

உத்தரப்பிரதேசத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை என்பது மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத அரசின் கருத்து- பிரியங்கா காந்தி

இந்தச் சம்பவம்குறித்து தெரிவித்துள்ள சாமராஜாநகர் பகுதியின் துணை ஆணையர்,”எல்லோரும் ஆக்சிஜன் பற்றாக்குறையால் இறந்தார்களா என்று கூற இயலாது” என்று தெரிவித்துள்ளார்.

சாமராஜாநகர் பகுதியில் 24 பேர் மரணமடைந்த சம்பவத்திற்கு பின், மாநில முதலமைச்சர் எடியூரப்பா அமைச்சரவையின் அவசர கூட்டத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.

‘தமிழகத்திலும் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படலாம்; ஸ்டெர்லைட் ஆலையில் தமிழக அரசு ஆக்சிஜன் தயாரிக்க வேண்டும்’: டாக்டர்கள் சங்கம் வலியுறுத்தல்

இந்த மரணங்கள் குறித்து தெரிவித்த கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார், “24 பேர் மரணமடைந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள்மீது குற்றவியல் வழக்கு பதிய வேண்டும்” என்றும் கூறியுள்ளார்.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்