Aran Sei

கடந்த மூன்று ஆண்டுகளில் அரசியல் காரணங்களினால் 230 பேர் கொல்லப்பட்டுள்ளனர் – ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் தகவல்

டந்த மூன்று ஆண்டுகளில் அரசியல் காரணங்களினால் 230 பேர் கொல்லப்பட்டுள்ளதாக ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் மக்களவையில் தெரிவித்துள்ளார்.

பீமா கோரேகான் வழக்கில் தலோஜா சிறையில் உள்ளவர்களை வேறு சிறைக்கு மாற்ற கூடாது – நீதிமன்றத்தில் மனுவளித்த உறவினர்கள்

மேலும், கடந்த 2019 ஆம் ஆண்டு, அரசியல் காரணங்களினால் 72 பேர்  மரணமடைந்துள்ளதாகவும், அதில் 19 பேர் மேற்கு வங்கத்தைச் சார்ந்தவர்கள் என்றும் தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் தகவலின் வழியாக தெரியவந்துள்ளதாக நித்யானந்த் ராய் கூறியுள்ளார்.

அதுமட்டுமல்லாது, கடந்த 2019 ஆம் ஆண்டு, அரசியல் காரணங்களினால் 72 பேர்  கொல்லப்பட்டது தொடர்பாக 61 வழக்குகள் பதியப்பட்டுள்ளது.

அரண்செய் சிறப்பிதழ் – பெகசிஸ் எனும் உளவுக்குதிரை

இதேபோன்று, கடந்த 2018 ஆம் ஆண்டு, 54 பேர் இறந்தது தொடர்பாக  54 வழக்குகள் பதியபட்டுள்ளதாகவும், 2017 ஆம் ஆண்டு 99 பேர் இறந்தது தொடர்பாக 98 வழக்குகளும் பதியப்பட்டுள்ளதாக ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் மக்களவையில் தெரிவித்துள்ளார்

2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் மேற்குவங்கத்தில் அரசியல் காரணங்களுக்காக அதிகமாக 13  கொலைகள் நடந்துள்ளன. இதே போன்று,2017 ஆம் ஆண்டு ஜார்கண்டில் அதிகபட்சமாக   42 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

 

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்