Aran Sei

உலகளவில் ஆண்டுக்கு 23 மில்லியன் கருச்சிதைவுகள் ஏற்படுகின்றன- பன்னாட்டு ஆய்வாளர்கள் அறிக்கையில் தகவல்

லகளவில் 7 கர்ப்பங்களில் 1 கருச்சிதைவுக்கு உள்ள உள்ளாவதாகவும், 11% பெண்கள் தங்கள் வாழ்நாளில் ஒருமுறையாவது கர்ப்பம் தவறுவதாக அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.

இதேபோன்று, உலகளவில் ஆண்டுக்கு 23 மில்லியன் கருச்சிதைவுகள் நடப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மத ரீதியாக தீண்டாமையை கடைபிடிக்கும் பாஜக அரசு – மத சுதந்திரத்திற்கான அமெரிக்க அரசின் குழு அறிக்கை

உலகளவில் 31 ஆய்வாளர்கள் இணைந்து இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளனர். மேலும், இந்த ஆய்வு முடிவுகளை விட உண்மையில் கருச்சிதைவின் எண்ணிக்கையானது அதிகரிக்கக்கூடும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேபோன்று, 2 சதவீத பெண்களுக்கு அதாவது 50 பெண்களில் ஒருவருக்கு 2 முறை கருச்சிதைவு ஏற்படுவதாகவும், 1 சதவீதத்திற்கும் குறைவான பெண்களுக்கு 3 அல்லது பலமுறை கருச்சிதைவு ஏற்படுவதாகவும் அந்த அறிக்கையில் தெரிய வந்துள்ளது.

‘பாகிஸ்தானில் இருந்து பறந்து வந்த புறா’ – முதல் தகவல் அறிக்கையை பதிய சொல்லிய எல்லை பாதுகாப்பு படையினர்

கருச்சிதைவு ஏற்படுவதை தவிர்க்கப் பெண்களின் உடல் மற்றும் மன நலனை வலுப்படுத்தும் முறையான திட்டமிடல் தேவை என்றும் அந்த அறிக்கையில் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், கருச்சிதைவின் காரணமாக பெண்கள் தங்களை தனிமைப்படுத்தி கொள்ளவதாகவும், குறிப்பாக தங்கள் நண்பர்கள், குடும்பத்திடம் கருச்சிதைவு குறித்து சொல்வதில்லை என்றும், சில சமயங்களில் தங்கள் துணையிடம் கூட சொல்லவதில்லை என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

source; the hindu

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்