Aran Sei

நகைச்சுவை கலைஞர் முனாவர் ஃபாருக்கிற்கு ஜாமீன் மறுப்பு – இந்துக் கடவுள்களை அவமதித்த வழக்கில் மத்திய பிரதேச உயர்நீதிமன்றம் தீர்ப்பு

ந்து மத கடவுள்களை அவமதித்தாகக் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் நகைச்சுவை கலைஞர் முனாவர் ஃபாருக்கிற்கு ஜாமீன் வழங்க முடியாது என மத்திய பிரதேச உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்திருப்பதாக என்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது.

முனாவர் இந்தக் குற்றத்தைச் செய்யவில்லை என்பதற்கு இதுவரை எந்த ஆதாரமும் இல்லை என்றும், விசாரணை நடைபெற்றுக் கொண்டு இருப்பதால், குற்றச்சாட்டுகளை நிருபிக்க முடியும் என நீதிமன்றம் கூறியிருப்பதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

‘வன்முறையைத் தூண்டிய பாஜக; டெல்லியில் ரத்தம் சிந்திய விவசாயிகள், காவலர்கள்’ – சிவசேனா குற்றச்சாட்டு

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் இந்து கடவுள்கள்குறித்து அநாகரீகமான கருத்துக்களை வெளிட்டதாக முனாவர் ஃபாருக்கு மற்றும் 4 நகைச்சுவை கலைஞர்கள் ஜனவரி 2 ஆம் தேதி கைது செய்யப்பட்டதாக என்டிடிவி   கூறியுள்ளது.

இந்தூர் மாநகராட்சியின் முன்னாள் மேயரும் அந்தத் தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினருமான மாலினி கவுரின் மகன் ஏக்லவ்யா சிங் கவுர் அளித்த புகாரின் பெயரில், முனாவர் ஃபாருக், நளின் யாதவ், எட்வின் ஆண்டனி, பிரகாஷ் வியாஸ், பிரியம் வியாஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தங்காத விடுதிக்கு கட்டணமா? – சென்னைப் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்

இதுவரை சேகரிக்கபட்ட ஆவணங்கள், வணிக ரீதியாகப் பொது இடத்தில் நடத்தப்பட்ட நகைச்சுவை நிகழ்ச்சியின் கானொளிகள் உள்ளிட்டவற்றை அடிப்படையாகக் கொண்டு,  இந்திய மக்களின் ஒரு பிரிவினரின் மத உணர்வுகளை வேண்டுமென்றே கொடூரமான, இழிவான சொற்களை மனுதாரர் பயன்படுத்தியதாக நீதிமன்ற உத்தரவில் கூறியிருப்பதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

டெல்லி வன்முறைகள்: உளவுத்துறையின் தோல்விக்கு அமித்ஷாவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் – காங்கிரஸ் வலியுறுத்தல்

நிகழ்ச்சி ஏற்பாட்டளர்களின் பெயரிலேயே, முனாவர் ஃபாருக் பங்கேற்றதாகவும், அவர் மீது குற்றம்சாட்டப்பட்டு இருக்கும் வகையில் அவர் எந்தக் கருத்துக்களையும் கூறவில்லை என்றும் முனாவரின் வழக்கறிஞர் தெரிவித்திருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அரசியலமைப்பின் படி மத, மொழி, பிரிவு மற்றும் பிராந்திய வேறுபாடுகளைக் கடந்து சகோதரத்துவம் பேண வேண்டியது கடமையென நீதிபதி ஆர்யா எடுத்துரைத்தாக என்டிடிவி  கூறியுள்ளது.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்