டெல்லி சங்கம் விகார் பகுதியைச் சேர்ந்த 21 வயதான குடிமை பாதுகாப்பு அதிகாரி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டது தொடர்பாக, சிபிஐ விசாரணை வேண்டும் எனக் கோரி அவரது குடும்பத்தினர் ஒரு வாரமாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆகஸ்ட் 26 ஆம் தேதி பணிக்கு சென்ற சபியா (பெயர் மாற்றப்பட்டுள்ளது), அவரது பணியிடத்தில் இருந்து ஃபரிதாபாத்திற்கு கடத்தி செல்லப்பட்டு, அங்குப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டுள்ளார் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
பெண்ணின் உடலில் வாயில் கத்தியால் குத்தப்பட்டு, உடல் சிதைக்கப்பட்டு, மார்பகங்கள் அறுக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.
உடலைக் கண்டுபிடித்த ஃபரிதாபாத் காவல்துறையினர், அதை பிரேத பரிசோதனைக்கு பிறகு குடும்பத்தினர் ஒப்படைத்தனர். பிரேத பரிசோதனை முடிவு இன்னும் வெளிவரவில்லை.
கொலையான பெண்ணுடன் பணியாற்றிய இரண்டு நபர்கள் கொடூரமான செயலில் ஈடுபட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ள குடும்பத்தினர், அவர்கள் கண்டுபிடிக்க முடியாதபடி தப்பி ஓடிவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
அந்த இருவருக்கு எதிராக வழக்கு பதியுமாறு சங்கம் விகார் காவல்நிலையத்தை அணுகியபோது, அவர்கள் மறுத்துவிட்டனர் என குடும்பத்தினர் கூறியுள்ளனர்.
இந்த வழக்கில் நியாயமான முறையில், சிபிஐ விசாரணை நடத்தப்பட்ட வேண்டும் என சங்கம் விகாரில் உள்ள வீட்டின் முன்பாக கடந்த ஒரு வாரமாக பெண்ணின் குடும்பத்தினர் போராடி வருகின்றனர்.
உயிரிழந்த பெண்ணின் உறவினர் மோனிஷ், “அவர் நான்கு மாதங்களுக்கு முன்பாக தான் பணியில் சேர்ந்தார். அவர் வழக்கம்போல ஆகஸ்ட் 26 ஆம் தேதி பணிக்கு சேர்ந்தார். ஆனால் மாலையில் வீடு திரும்ப வில்லை. இரவு எட்டு மணிக்கு அவர் எங்களை அழைத்தபோது எங்களால் அந்த அழைப்பை ஏற்க முடியவில்லை. பிறகு நாங்கள் அவரை தொடர்பு கொள்ள முயன்றபோது அவரது எண் அணைக்கப்பட்டிருந்தது. நாங்கள் கவலை அடைந்து அவரது அலுவலகத்திற்கு சென்று பார்த்தபோது, எந்த தகவலும் இல்லை. அவர்கள் எங்களை உள்ளே செல்ல அனுமதிக்கவும் இல்லை” என தெரிவித்துள்ளார்.
”அலுவலகத்தின் தனிப்பட்ட ஆவணங்களை யாரிடமும் காட்ட அனுமதியில்லை எனக் கூறி, பார்வையாளர் பதிவேட்டைக் காட்ட அலுவலக காவலர் மறுத்துவிட்டார்” எனக் கூறியுள்ளார்.
இரவு 10 மணிக்கு சாபியாவின் சக ஊழியரை அழைத்ததாக கூறிய மோனிஷ், “அவரது முதலாளியின் வழக்கு விசாரணைக்காக சாபியா காவல்நிலையம் சென்றுள்ளார். அவர் நன்றாக இருக்கிறார். சிறிது நேரத்தில் வீடு திரும்புவார் என்று உறுதியளித்தார்” என குறிப்பிட்டுள்ளார்.
அவரது உறுதியளித்ததை அடுத்து சாபியா, சிறிது நேரத்தில் திரும்பி விடுவார் என்று நாங்கள் நம்பினோம். ஆனால் மோசமான தகவல் தான் வந்தது. அடுத்த நாள் காலை இரண்டு காவலர்கள் வந்து சாபியாவின் உடலை அடையாலம் கண்டு எடுத்துச் செல்லுமாறு கூறினர்” என மோனிஷ் தெரிவித்தார்.
பெண்ணின் மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை வேண்டும் எனக் கூறி நான்கு நாட்களாக பெற்றோர்கள் போராடி வரும் நிலையில், இதுவரை எந்த அதிகாரிகளும் அவர்களை சென்று பார்க்கவில்லை.
Source : The Cognate
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.