Aran Sei

கொரோனாவால் சுற்றுலாத் துறையில் 2 கோடி பேர் வேலையிழப்பு – மாநிலங்களவையில் ஒன்றிய அரசு தகவல்

டந்தாண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் வரை சுற்றுலாத் துறையில் 21.5 மில்லியன் பேர் வேலையை  இழந்துள்ளதாக ஒன்றிய சுற்றுலாத்துறை அமைச்சர் ஜி.கிசன் ரெட்டி மாநிலங்களவையில் தெரிவித்துள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

‘மிஷன் உ.பி, உத்தரகண்ட், லக்னோவை டெல்லியாக மாற்றுவோம்’ – அடுத்தக்கட்ட திட்டங்களை அறிவித்த போராடும் விவசாயிகள்

பொருளாதார ஆய்வுகளுக்கான தேசிய குழுவின் ஆய்வின்  வழியாக இந்தத் தகவல் தெரியவந்துள்ளதாகவும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

மேலும் அந்த ஆய்வறிக்கையின் படி, சுற்றுலாத்துறையின் பொருளாதாரம்   கடந்த ஆண்டு ஏப்ரல்- ஜூன் வரை  42.8 விழுக்காடு வீழ்ச்சியுற்றுள்ளதாகவும், ஜூலை – செப்டம்பர் வரை 15.5 விழுக்காடும், அக்டோபர் – டிசம்பர் வரை 1.1 விழுக்காடும்  வீழ்ச்சியடைந்துள்ளதாகவும்  தி இந்து செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘என்னை தேசதுரோகியாக சித்தரிக்க லட்சத்தீவு நிர்வாகம் முயல்கிறது’ – காவல்துறையின் குற்றச்சாட்டிற்கு திரைக்கலைஞர் ஆயிஷா மறுப்பு

அதுமட்டுமல்லாது இடப்பெயர்வு ஆணையத்தின் தகவலின் படி, கடந்த 2௦19 ஆம் ஆண்டு  10.93 மில்லியன் வெளிநாட்டு பயணிகள் வருகை புரிந்ததாகவும், அதுவே 2௦2௦ ஆம் ஆண்டு  2.74 மில்லியன் நபர்களாகக் குறைந்துள்ளதாகவும், இந்தாண்டு ஜூலை 2021 வரை 0.42 மில்லியன்  வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள்  வருகை புரிந்துள்ளது தெரியவந்துள்ளதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்