Aran Sei

தமிழ்நாட்டில் தற்கொலை செய்து கொண்ட 2,035 சிறார்கள் – தேசிய குற்றவியல் ஆவணக் காப்பகம் தகவல்

கடந்த  2017 முதல் 19 ஆண்டுகாலத்தில் 14-18 வயதுக்குட்பட்ட ஏறத்தாழ 24,000 குழந்தைகள் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக  தேசியக் குற்ற ஆவணக் காப்பகம் அறிக்கை  வெளியிட்டுள்ளது.

இதில் சுமார் 4,000  குழந்தைகளின் தற்கொலைக்குக் காரணம் தேர்வில் தோல்வியடைந்ததுதான் என்று அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

அரண்செய் சிறப்பிதழ் – பெகசிஸ் எனும் உளவுக்குதிரை

இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள  தகவலின் படி,   2017-19 ஆண்டுகாலத்தில் 24,568  குழந்தைகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதில்   13,325 பெண்கள் என்றும்  தேசியக் குற்ற ஆவணக் காப்பகத்தின்  அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேபோன்று,  2017 ஆம் ஆண்டில் 14-18 வயதுக்குட்பட்ட 8,029 குழந்தைகள் தற்கொலை செய்துகொண்டு மரணித்துள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

‘பாகிஸ்தானில் கிரிக்கெட் ஆட கூடாது என மிரட்டல்’ – இந்திய கிரிக்கெட் வாரியம் மீது தென்னாப்பரிக்க வீரர் புகார்

மேலும்,  2018 ஆம் ஆண்டு 8,162  குழந்தைகளும்,  2019 ஆம் ஆண்டு 8,377 குழந்தைகளும் தற்கொலை செய்துகொண்டு மரணித்துள்ளதாகவும்   தேசியக் குற்ற ஆவணக்காப்பகத்தின்  அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக மத்திய பிரதேசத்தில்  3,115 குழந்தைகளும், மேற்கு வங்கத்தில்  2,802 குழந்தைகளும், மகாராஷ்டிராவில்  2,527 குழந்தைகளும், தமிழ் நாட்டில் 2,035 குழந்தைகளும் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக அந்த அறிக்கையின் வழியாக தெரியவந்துள்ளது.

 

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்