Aran Sei

முசாபர் நகர் கலவரம் – 8 ஆண்டுகள் கடந்தும் வழங்கப்படாத நீதி

த்தரபிரதேச மாநிலம்  முசாபர் நகர் கலவரம் நடந்து  8 ஆண்டுகளைக் கடந்துள்ள  நிலையில்  இதுவரை 7 பேர் மட்டுமே தண்டனைப் பெற்றுள்ளனர்.

மேலும், கொலை, கற்பழிப்பு, கொள்ளை மற்றும் தீ வைப்பு உள்ளிட்ட 97 வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்ட 1,117 பேர்  போதிய ஆதாரங்களில்லை  என்றுக்கூறி  நீதிமன்றத்தால்  விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இந்தக் கிராமத்தின்  கவால் கிராமத்தைச் சேர்ந்த சச்சின் மற்றும் கௌரவ் ஆகிய இருவர் கொல்லப்பட்ட வழக்கில் மட்டும் 7 பேர் குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை பெற்றுள்ளனர்.

இந்தக் கலவரம்குறித்து விசாரிக்கச் சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைத்தது மாநில அரசு.

இந்நிலையில் இது  தொடர்பாகச் சிறப்பு புலனாய்வுக் குழு 1480 பேர்மீது 51௦ வழக்குகள் பதிந்தது. மேலும் 175 வழக்குகளில் குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஆனால், போதிய ஆவணங்கள் இல்லை என்றுக் கூறி 1,117 பேரை  நீதிமன்றம் விடுவித்த நிலையில், எந்த வழக்கிலும் அரசுத் தரப்பு மேல்முறையீடு செய்யவில்லை.

இவ்வேளையில், கலவரம் தொடர்பாகப் பதியப்பட்ட 77 வழக்குகளை ரத்து செய்ய மாநில அரசு முடிவு செய்த நிலையில், ஒரே ஒரு வழக்கை மட்டும் நீக்க நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. அந்த வழக்கில் பாஜகவைச் சேர்ந்த 12 தலைவர்கள் குற்றம்சாட்டப்பட்டிருந்தார்கள். குறிப்பாக உத்தரபிரதேச அமைச்சர் சுரேஷ் ரானா, பாஜக சட்டமன்ற உறுப்பினர் சங்கீத் சோம், முன்னாள் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் பார்தெந்து சிங், வி.ஹச்.பி-யைச் சேர்ந்த சாத்வி பிரச்சி ஆகியோராகும்.

இந்தக் கலவரத்தின்போது  6௦ பேர் கொல்லப்பட்டனர். 40,000 பேர் இடம்பெயர்ந்தனர்.

source: தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்