Aran Sei

இந்திய மருத்துவ கழகத்தின் தகவல்களை பெற வழிசெய்ய வேண்டும் – 200க்கும் மேற்பட்ட ஆய்வாளர்கள் பிரதமருக்கு கடிதம்

கொரோனா இரண்டாம் அலையால் பாதிப்புகள் அதிகரித்து வரும் சூழலில் இந்திய மருத்துவ ஆய்வு கழகத்தின்(ICMR) தகவல்களைப் பரந்துபட்ட அளவில் அணுக வழிசெய்ய வேண்டுமென்று 200க்கும் மேற்பட்ட ஆய்வாளர்கள் பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் துரிதமான தகவல்கள் ஆய்வுக்குள்ளாக்கப்பட்டு அறிக்கைகள் தயாரிக்கப்பட வேண்டும். அப்போதே கொரோனா கட்டுப்படுத்துதல் பணி எளிமையடையும் என்று அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் கல்வி சுதந்திரத்தின் கழுத்தை நெறிக்கும் வலதுசாரிகள் – விரிவான அறிக்கை

மேலும், விரைவான தகவல்கள் திரட்டல், உருமாற்றமடைந்த தொற்று கிருமி வகைகளைக் கண்காணித்தல், கொரோனா தொற்றுகளை கண்டறிய பரிசோதனை மேற்கொள்ளுதல், குணமடைந்த நோயாளிகளின் உடல் ஆரோக்கியத்தை அறிதல், தடுப்பூசிக்குப் பின் நோய் எதிர்ப்பு திறனைச் சோதித்தல் ஆகியவை முக்கியத்துவம் உடையதாக ஆய்வாளர்கள் தெரிவித்ததாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி கூறுகிறது.

இதுமட்டுமல்லாமல், மருத்துவ தகவல்களை ஆராய்வதின் வழியே எத்தனை ஆக்சிஜன் சிலிண்டர்கள், படுக்கைகள் தேவை, தீவிர சிகிச்சைகள் பிரிவுகள் தேவைப்படும் என்பதை கண்டறிய இயலும் எனவும், ஆனால் பெரும்பான்மையான ஆய்வாளர்களால் இந்தத் தகவல்களை அணுக இயலவில்லை என்று தெரிவித்துள்ளதாக அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

கொரோனாவுக்கு எதிரான இந்தியாவின் செயல்பாடுகள் – அறிவியல் வல்லரசு என்பது பகல்கனவே

ஐ.சி.எம்.ஆர் யின் தகவல்களை அரசு சாராத மற்றும் சில அரசு சார்ந்த ஆய்வாளர்களாலும் அணுக முடியவில்லை என்றும், டி.எஸ்.டி மற்றும் நிதி ஆயோக் வெளியிட்டுள்ள முன்கூட்டிய கணிப்பின் புள்ளிவிவரங்களைக் கூட அணுக முடியவில்லை என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விலை அதிகம் என்று கூச்சலிடுபவர்கள் கோவிஷீல்ட்-ஐ வாங்கத் தேவையில்லை – அதார் பூனாவாலா

மேலும், நோய் பரவலுக்கான அனைத்து புள்ளிவிவரங்களையும் தகவல்களையும் ஆராய்வதின் தேவை அதிகமாக உள்ளது. திட்ட மாதிரிகளை உருவாக்குதல், பொதுமக்களுக்குக் கல்வி கற்பித்தல், தடுப்பூசிகளை ஊக்குவித்தல், தடுப்பூசி குறித்த அச்சத்தை நீக்குதல் மற்றும் போலி செய்திகளைப் பரப்புவதைத் தடுத்தல் ஆகியவற்றிற்கு உதவுமென்று பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்