Aran Sei

நாடாளுமன்றத்தை முற்றுகையிட வந்த விவசாயிகள் – காவல்துறையினர் குவிப்பு

வேளாண் சட்டத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட 200 விவசாயிகள் நாடாளுமன்றத்திற்கு அருகில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் திரண்டுள்ளதாக தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் போது அவ்வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக விவசாயிகள் சங்கத்தினர் அறிவித்திருந்தனர்.

வேவு பார்க்கப்பட்டவர்களில் அனில் அம்பானியும் ஒருவர் – ரபேல் ஒப்பந்தத்துடன் தொடர்புடையவர்களும் பட்டியலில் அடக்கம்

மேலும், டெல்லி மாநில ஆளுநர் அனில் பைஜால் வரும் ஆகஸ்ட் 9 வரை நாடாளுமன்ற வளாகத்திற்கு அருகில் போராட்டத்தில் ஈடுபட அனுமதியளித்திருந்தார்.

இந்நிலையில், 200 விவசாயிகள் சிங்கு எல்லையிலிருந்து பேருந்து வழியாக காவல்துறையின் பாதுகாப்போடு ஜந்தர் மந்தர் பகுதிக்கு வந்துள்ளதாகவும் தி வயர் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

போராட்டம் காலை 11 மணியளவில் தொடங்கியதாகவும் ஆனால் விவசாயிகள் மதியம் 12:25 மணியளவிலேயே விவசாயிகள் போராட்டக்களத்திற்கு வந்ததாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘இடஒதுக்கீட்டு கொள்கையை அவமதிக்கும் பாஜக’ – பீம் ஆர்மி சந்திரசேகர் ஆசாத்

இதுகுறித்து தெரிவித்துள்ள விவசாயிகள் தலைவர் சிவ குமார் காக்கா, “மூன்று இடங்களில் விவசாயிகளை காவல்துறை வழிமறித்து ஆதார் அட்டையைச் சோதித்தது. ஜந்தர் மந்தர் வரும்வரை வேளாண் சட்டத்தைத் திரும்ப பெற வேண்டுமென விவசாயிகள் முழக்கங்களை எழுப்பினர்” என்று தெரிவித்துள்ளதாகவும் தி வயர் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், விவசாயிகள் போராட்டத்தால் அந்தப் பகுதியில் அதிரடிப் படை, மத்திய பாதுகாப்புப் படை ஆகியவைக் குவிக்கப்பட்டுள்ளதாக அந்த செய்தி கூறியுள்ளது.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்