Aran Sei

டெல்லியில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் 20 நோயாளிகள் உயிரிழப்பு – ஆபத்தில் 200 நோயாளிகள்

டெல்லி ஜெய்பூர் கோல்டன் மருத்துமனையில் நேற்றிரவு ஏற்பட்ட ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் 20 நோயாளிகள் உயிரிழந்துள்ளனர்.

இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”நேற்றிரவு ஏற்பட்ட ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் மட்டும் 20 நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். மேலும் இன்னும் அரை மணி நேரத்திற்கு மட்டுமே ஆக்சிஜன் கையிருப்பு இருப்பதால் 200 நோயாளிகளின் உயிர் ஆபத்தில் உள்ளது.”எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹரியானாவில் திருட்டுத்தனமாக ஆக்சிஜன் விற்ற நால்வர் கைது – ஒரு சிலிண்டர் ரூ 90,000 விற்கப்பட்டது விசாரணையில் அம்பலம்

மேலும், டெல்லியில் உள்ள சரோஜ் மருத்துவமனையும் ஆக்சிஜன் பற்றாக்குறையால் நோயாளிகள் அனுமதிப்பதை நிறுத்துவதோடு, நோயாளிகளை வெளியேற்றுவதாகவும் அதன் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அதே போன்று, நாளொன்றுக்கு 8 ஆயிரம் லிட்டர் ஆக்சிஜன்  தேவையிருக்கும் நிலையில், கடந்த 12 மணி நேரத்தில் 500 லிட்டர் ஆக்சிஜன் மட்டுமே வழங்கப்பட்டிருக்கிறது என்றும், ஒன்றில் இருந்து ஒன்றரை மணிநேரத்திற்கு மட்டுமே கையிருப்பு உள்ளதால் 260 கொரோனா நோயாளிகள் உள்ளிட்ட 350 நோயாளிகளின் உயிர் ஆபத்தில் உள்ளதாக, டெல்லியில் உள்ள பத்ரா மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் மருத்துவர் எஸ்.சி.எல். பத்ரா தெரிவித்துள்ளார்.

Source : ANI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்