Aran Sei

பாஜக சட்டமன்ற உறுப்பினர் தாக்கப்பட்ட விவகாரம் – விவசாயிகளுக்கு ஆதரவளித்த வழக்கறிஞர் சங்கம்

ஞ்சாப் மாநிலத்தில் விவசாயிகளால் பாஜக சட்டமன்ற உறுப்பினர் அருண் நராங் தாக்கப்பட்ட விவகாரத்தில், 20க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் இலவச சட்டஉதவிகளை வழங்க முடிவுசெய்துள்ளதாகதி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

அபோஹர் பகுதியின் சட்டமன்ற உறுப்பினர் அருண் நராங் கடந்த சில தினங்களுக்கு முன்பு செய்தியாளர்கள் சந்திப்பில் பங்கேற்றபோது அங்குக் கூடியிருந்த விவசாயிகளால் தாக்கப்பட்டார்.

விவசாய சட்டங்களை நீக்க கோரி பாரத்பந்த் – முடங்கியது டெல்லி, ஹரியானா, பஞ்சாப்

இந்தச் சம்பவம் தொடர்பாகக் காவல்துறை 250-300 விவசாயிகள்மீதும், ஆலம்வாலா பகுதியின் விவசாயிகள் சங்கத் தலைவர்மீதும் வழக்கு பதிந்துள்ளது.

இந்நிலையில், இந்த விவகாரத்தில் முக்ட்சர், பத்திண்டா மாவட்டத்தைச் சார்ந்த 20 மேற்பட்ட வழக்கறிஞர்கள் இலவச சட்டம் உதவி வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது என அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விவசாய சட்டத்தில், தனியார் மண்டிகளால் யார் பயன் பெறுவார்கள்? – மத்திய அரசுக்கு பஞ்சாப் முதலமைச்சர் கேள்வி

இதுகுறித்து தெரிவித்துள்ள ராம்பூர் புல் வழக்கறிஞர் சங்கத்தின் தலைவர் அஜித்பால் சிங், இந்தச் சம்பவம் தொடர்பாகப் பிரிவு 307 ன் கீழ் கொலை வழக்கு தவறாகப் பதியப்பட்டுள்ளது. உண்மையில் இது கொலைமுயற்சி அல்ல, பிரிவு 355 இன் படி இழிவாகப் பேசியவரைத் தாக்கிய வழக்கே பதியப்பட வேண்டும் ” என்று கூறியுள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி தெரிவிக்கிறது.

விளம்பரத்திற்கு 8 கோடி, உயிரிழந்த விவசாயிகளுக்கு நிவாரணம் இல்லையா – பஞ்சாப் முதல்வர் கேள்வி

மேலும், இதுகுறித்து கூறியுள்ள இக்பால் சிங், “இந்த நிகழ்வில் விவசாயிகள் திட்டமிட்டு வன்முறையில் ஈடுபடவில்லை . இது ஒரு தற்செயலான நிகழ்வு ” என்று தெரிவித்துள்ளதாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்