Aran Sei

பாலஸ்தீன பகுதிகளில் தேடுதல் வேட்டையில் ஈடுபடும் இஸ்ரேலியப் படையினர்- 2 பாதுகாப்பு படையினர் உட்பட மூன்று பாலஸ்தீனர்கள் மரணம்

பாலஸ்தீனத்தின் மேற்கு பகுதியியல் ஜெனின் நகரில் இஸ்ரேலியப் பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் 2 பாலஸ்தீன பாதுகாப்பு படையினர் உட்பட மூன்று பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதாக தி வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து தெரிவித்துள்ள பாலஸ்தீன அதிபரின் செய்தி தொடர்பாளர் மஹ்மூத் அப்பாஸ்,”இது ஆபத்தான இஸ்ரேலிய விரிவாக்க  நடவடிக்கை” என்று இஸ்ரேலிய சிறப்பு படையினரின் தாக்குதலைக் கண்டித்துள்ளதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

யூத தேசியவாதிகளின் ஜெருசலேம் பேரணிக்கு இஸ்ரேல் அனுமதி : பாலஸ்தீனத்தை மீண்டும் சூழுகிறதா போர்மேகம்?

இதே போன்று மற்றொரு செய்தித்தொடர்பாளரான நபில் அபு ரடிநே, இந்தத் தாக்குதலைச் சர்வதேச சமூகமும், அமெரிக்க அரசும் தலையிட்டு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டுமென கூறியுள்ளதாகவும் தி வாஷிங்டன் போஸ்ட் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெனின் பகுதியில் இஸ்ரேலிய படையினர் தீவிரவாத அமைப்பினரை கைது செய்ய தேடுதல் வேட்டையில் ஈடுப்பட்டபோது, அவர்கள் நடத்திய தாக்குதளுக்கு இஸ்ரேலிய படையினர்  நடத்திய எதிர் தாக்குதலில், தீவிரவாத அமைப்பினரோடு தொடர்புடைய ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாகவும், அதில் 2 பாலஸ்தீன பாதுகாப்பு படையினர் கொல்லப்பட்டுள்ளதாகவும் இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்: உளவியல் சிக்கலால் அவதியுறும் குழந்தைகள்

மேலும், பாலஸ்தீன அரசால் நிர்வகிக்கப்பட்டு வரும் பாலஸ்தீன பகுதிகளில் இஸ்ரேல் தொடர்ச்சியாக கைது நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் தி வாஷிங்டன் போஸ்ட் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்