டெல்லியில் கடந்த ஜனவரி 26ம் தேதி நடந்த குடியரசு தினத்தில் டிராக்டர் பேரணி சென்று போராட்டத்தில் ஈடுபட்ட 83 விவசாயிகளுக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என பஞ்சாப் முதலமைச்சர் சரண்சித் சிங் சன்னி தெரிவித்துள்ளார்.
ஒன்றிய அரசு கொண்டுவந்த 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி கடந்த ஆண்டு நவம்பர் மாத்த்தில் ‘டெல்லி சலோ’ (டெல்லிக்குப் போகலாம்) என்று விவசாயிகள் போரட்டத்தை முன்னெடுத்தனர்.
தொடர் போராட்டத்தின் அடுத்த கட்டமாக கடந்த ஜனவரி 26ம் தேதி நடந்த குடியரசுத் தினத்தின்போது, விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்த டெல்லி காவல்துறையினர் அனுமதியளித்தனர். விவசாயிகள் பேரணி தொடக்கத்தில் அமைதியாக இருந்தநிலையில் திடீரென டெல்லி செங்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காவல்துறையினருக்கும் விவசாயிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வன்முறையாக மாறியது.
ஆசிரியரின் பாலியல் துன்புறுத்தலால் பள்ளி மாணவி தற்கொலை – போக்சோ சட்டத்தில் ஆசிரியர் கைது
விவசாயிகள் தரப்பில் வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும்வரை போராட்டத்தை கைவிடமாட்டோம் என்று தீர்க்கமாக உள்ளனர். ஆனால், ஒன்றிய அரசு பல கட்ட பேசுவார்த்தை நட்த்தியும் எந்த முன்னேற்றமும் இல்லை.
வேளாண் சட்டங்களுக்கு எதிராகவும், விவசாயிகளுக்கு ஆதரவாக இருக்கும் பஞ்சாப் ஆளும் காங்கிரஸ் அரசு நேற்று புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. விவசாயிகள் போராட்டத்தை ஒன்றிய அரசு எதிர்த்துவரும் நிலையில், குடியரசுதினத்தன்று போராட்டத்தில் ஈடுபட்டு கைதான 83 விவசாயிகளுக்கு இழப்பீட்டை அறிவித்துள்ளது காங்கிரஸ் அரசு.
’ஜெய்பீம்’ படம் மாற்றத்திற்கான ஒரு உத்வேகம்’ – கேரள முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா டீச்சர்
பஞ்சாப் முதலமைச்சர் சரண்சித் சிங் சன்னி ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக எனது அரசு இருக்கிறது என்பதை உறுதி செய்துகொள்கிறேன். கடந்த ஜனவரி 26ம் தேதி டெல்லியில் நடந்த பேரணியில் காவல்துறையால் கைது செய்யப்பட்ட 83 விவசாயிகளுக்கு இழப்பீடாக ரூ.2 லட்சம் வழங்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.
Source: TOI
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.