Aran Sei

‘பிரதமர் மோடி, முதல்வர் யோகிஆதியநாத்தை விமர்சித்து வெளியான காணொளி’ – இரண்டு பேரை கைது செய்த காவல்துறையினர்

த்திரபிரதேசம் மாநிலத்தில், பிரதமர் மோடி மற்றும் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை அநாகரீகமான வார்த்தைகளில் விமர்சித்துக் காணொளி வெளியிட்டது தொடர்பாக இரண்டு பேரை உத்திரபிரதேச காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

பாஜகவைச் சேர்ந்த தலைவர்களை அநாகரீகமாக விமர்சித்து ட்விட்டர், பேஸ்புக் மற்றும் வாட்சப்பில் வெளியிடப்பட்டுள்ளது என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

டெல்லி உள்ள அரசு பள்ளிகளில் அதிகரித்திருக்கும் மாணவர் சேர்க்கை – கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார பின்னடைவே காரணம் எனத் தகவல்

இது தொடர்பாக பன்சித் ரோடு காவல் நிலையத்தின் பொறுப்பாளர் மந்து ராம் அளித்த புகாரில் பெயரில் ஷெர் (பத்கி செரியா) பிரகாஷ் வர்மா மற்றும் ரமேஷ் யாதவ் என்ற இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிரகாஷ் வர்மா மற்றும் ரமேஷ் யாதவ் அந்தக் காணொளியைச் செப்டம்பர் 23 ஆம் தேதி பதிவிட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Source : The Hindu 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்