Aran Sei

அகமதாபாத் – மும்பை புல்லட் ரயில் திட்டத்திற்கு எதிர்ப்பு: நிலம் கையகப்படுத்துவதற்கு எதிராக விவசாயிகள் புகார்

டந்த இரண்டு ஆண்டுகளில், அகமதாபாத் மற்றும் மும்பைக்கு இடையேயான புல்லட் ரயில் திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்தல் நடவடிக்கைகள் தொடர்பாக, குஜராத் விவசாயிகளால் மொத்தம் 1,908 புகார்களும் ஆட்சேபனைகளும்  எழுப்பப்பட்டுள்ளன.

நேற்று (மார்ச் 22), அம்மாநில சட்டபேரவையில், இது தொடர்பாக சட்டபேரவை உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்கு, கேள்வி நேரத்தின்போது மாநில அரசு எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளது.

எட்டு வழி சாலை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த தடை தொடரும் – உச்ச நீதிமன்றம்

அதில், “குஜராத்தில் புல்லட் ரயிலுக்கு நிலம் கையகப்படுத்தப்பட வேண்டிய எட்டு மாவட்டங்களில், அதிகப்படியாக சூரத்தில் 940 விவசாயிகளால் ஆட்சேபனைகளும் புகார்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதற்கு அடுத்தபடியாக, பருச் (408), வல்சாத் (236) மற்றும் நவ்சரி (201) ஆகிய மாவட்டங்களில் அதிக எண்ணிக்கையிலான புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கெடாவில் எந்தப் புகாரும் பதியப்படவில்லை.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ்  செய்தி வெளியிட்டுள்ளது.

குஜராத் மாநிலத்தில் இத்திட்டத்திற்கான நிலம் கையகப்படுத்துவதில் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளதாகவும், தேசிய அதிவேக ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் ஜப்பானிய நிறுவனத்துடன் இணைந்து முதல் கட்ட பணிகளைத் தொடங்குவதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகவும் முன்பு தி இந்தியன் எக்ஸ்பிரஸ்  செய்தி வெளியிட்டிருந்தது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்