Aran Sei

மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் 18 பேர் உயிரிழப்பு – ஐநா மனித உரிமை அலுவலகம் தகவல்

மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராடி வரும் மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில், ஞாயிறுக்கிழமை (பிப்ரவரி 28), 18 பேர் உயிரிழந்திருப்பதோடு, 30 பேர் காயமடைந்திருக்கின்றனர் என, நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் கிடைத்திருப்பதாக, ஐநா மனித உரிமை அலுவலகம் தெரிவித்துள்ளது.

யாங்கோன், டேவி, மாண்டலே, மெயிக், பாகோ, போகோக்கு ஆகிய இடங்களில் உயிரிழப்புகள் நிகழ்ந்திருக்கிறது என்றும், கண்ணீர் புகை குண்டுகள், கைக்குண்டுகளை காவல்துறையினர் பயன்படுத்தியதில் இந்த உயிரிழப்புகள் நிகழ்ந்திருக்கிறது என்றும், ஐநா மனித உரிமை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

”மியான்மரில் போராட்டக்காரர்கள் மீது அதிகரித்து வரும் வன்முறையை வன்மையாக கண்டிக்கிறோம், அமைதியான முறையில் போராடி வருபவர்கள் மீதான வன்முறையை கைவிடுமாறு ராணுவத்தை கேட்டுக்கொள்கிறோம்” என, ஐநா மனித உரிமை அலுவலகத்தின் செய்தி தொடர்பாளர் ரவீனா ஷம்தசானி தெரிவித்துள்ளார்.

இந்தியாவும் பாகிஸ்தானும் நட்புறவுடன் இருக்க வேண்டும் என்பதே என் கனவு – நோபல் பரிசு பெற்ற மலாலா கருத்து 

பிப்ரவரி 1 ஆம் தேதி, ஆங் சான் சூ கியின் ஆட்சியை கவிழ்த்து அதிகாரத்தை ராணுவம் கட்டுப்படுத்தியதில் இருந்து, ஒரே நாளில் அதிக எண்ணிக்கையிலான உயிரிழப்புகள் பிப்ரவரி 28 ஆம் தேதி நிகழ்ந்துள்ளது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆங் சான் சூ கியின் ஆட்சியை, மீண்டும் அமைக்கக் கோரி பேராடி வரும் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது, ராணுவ ஆட்சியினர் மேற்கொண்டு வரும் வன்முறையில், தொடரந்த உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன.

 

‘பிரதமர் மோடி தன் சுயத்தை மறைப்பவரல்ல’ – மோடியைப் புகழ்ந்த காங்கிரஸ் தலைவர்

தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருவதால், உயிரிழப்புகளை உறுதிப்படுத்துவதில் சிக்கல் இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

“ஆட்சி கவிழ்ப்பிற்கு எதிராக அமைதியான முறையில் போராடி வரும் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது, ஆபத்தான அல்லது மூர்க்கத்தனமான சக்திகளைப் பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாதது. அது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்” என்று நியூயார்க்கை தலைமையிடமாக கொண்டு செயல்படும் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசிய துணை இயக்குநர் பில் ராபர்ட்சன் கூறியுள்ளார்.

 

‘ பாஜக-அதிமுக என்ற இரட்டை இன்ஜின்களால் மக்களுக்கு பயனில்லை’ – பிருந்தா காரத் விமர்சனம்

“மியான்மர் இராணுவ ஆட்சிக்குழுவின் நடவடிக்கைகளை உலகம் கவனித்து வருகிறது, அதற்கு அவர்கள் பொறுப்பேற்க  வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.

Source: AP

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்