Aran Sei

வாக்காளர் பட்டியலை விட அதிக வாக்குகள் பதிவு – மறுதேர்தலுக்கு உத்தரவிட்ட  மாவட்ட தேர்தல் அதிகாரி

Image Credits: DNA India

சாம் மாநிலத்தில் வாக்காளர் பட்டியலில் உள்ளதை விட அதிக வாக்குகள் பதிவானதாகப் புகார் எழுந்துள்ளது. ஹஃப்லோங் சட்டமன்ற தொகுதியில் கோட்லிர் எல்.பி பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குசாவடியில் 90 வாக்காளர்கள் மட்டுமே இருக்கும் நிலையில் 171 வாக்குகள் பதிவாகியுள்ளன.

இதையடுத்து, அந்த வாக்குசாவடியில் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த 5 அதிகாரிகளைப் பணியிடை நீக்கம் செய்து மாவட்ட தேர்தல் அதிகாரி உத்தரவிட்டுள்ளார். மேலும், அங்கு மறுதேர்தல் நடத்தவும் அவர் முன்மொழிந்துள்ளார்.

அசாம் சட்டப்பேரவைக்கான இரண்டாம் கட்ட தேர்தலின் போது இந்நிகழ்வு நடைபெற்றுள்ளது. இன்னும் மறுவாக்குப்பதிவிற்கான அதிகாரப்பூர்வ அறிக்கை இன்னும் வெளியிடப்படவில்லை.

புதுச்சேரியில் பிறப்பிக்கப்பட்ட 144 தடை – மாவட்ட ஆட்சியரின் உத்தரவை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றம்

“அந்தக் கிராமத்தின் தலைவர் வாக்காளர் பட்டியலை ஏற்க மறுத்து, அவர் தனியாக ஒரு பட்டியலைக் கொண்டு வந்தார். அதன் பிறகு அந்தக் கிராம மக்கள் அந்தப் பட்டியலின்படி வாக்களித்தனர்” என்று அதிகாரி ஒருவர் கூறினார்.

கிராமத் தலைவரின் கோரிக்கையை வாக்குச்சாவடி அதிகாரிகள் ஏன் ஏற்றுக்கொண்டனர், வாக்குச் சாவடியில் பாதுகாப்பு அதிகாரிகள் யாரேனும் இருந்தார்களா அல்லது அவர்கள் வகித்த பங்கு என்ன என்பது குறித்த தகவல்கள் தெரியவில்லை.

Source : Indian Express

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்