Aran Sei

காஷ்மீரில் அடைக்கப்பட்ட 168 ரோகிங்கியாக்கள் – நாடு கடத்த ஏற்பாடு செய்யும் மத்திய அரசு

ம்மூ & காஷ்மீரில் வசித்து வந்த பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 168 ரோகிங்கியா இஸ்லாமியர்கள், அகதிகள் முகாமில் அடைக்கப்பட்டிருப்பதாக, தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.

வெளிநாட்டினர் சட்டத்தின் கீழ் கத்துவா பகுதியில் இருக்கும் ஹீராநகர் துணைச் சிறைச்சாலையில் அகதிகள்  முகாம் அமைக்கப்பட்ட அடுத்த தினமே ரோகிங்கியாக்கள் அங்கு அடைக்கப்பட்டிருப்பதாக, அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘கார்ப்ரேட்டுகளால் நிலம் பறிக்கப்பட்டால் பதவியை ராஜினாமா செய்வேன்’ – விவசாய சட்டத்திற்கு ஆதரவாக பாஜக எம்.பி உறுதி

வெளிநாட்டினர் சட்டப் பிரிவு (3(2)E) யின் கீழ் 250 பேரை அடைக்கும் அளவிலான மையங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்று உள்துறை அமைச்சகத்தின் ஆணைக்கு இணங்க, கடந்த  வெள்ளிக்கிழமை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன என்று மூத்த அரசு அதிகாரி தெரிவித்ததாக, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

”பாஸ்போர்ட் சட்டத்தின் விதி 3ன் படி உரிய பாஸ்போர்ட் இல்லாததால் இவர்கள் இங்கு அடைக்கப்பட்டிருக்கின்றனர்” என்றும், இது போன்ற பலரை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருவதாகவும் அந்த அதிகாரி தெரிவித்ததாக, தி இந்தியன் எக்ஸ்பிரஸ் கூறியுள்ளது.

தடுப்பூசி எடுத்துக்கொண்டவருக்கு மீண்டும் கொரானா: எதிர்கட்சிகளின் விமர்சனத்தை மெய்ப்பிக்கிறதா கொரோனா மருந்து.

”முகாம்களில் அடைக்கப்பட்ட பிறகு நடைமுறையில் சொல்லப்பட்டிருக்கும்படி அவர்களின் நாடு கண்டறிப்படும்” என்றும், அதன் அடிப்படையில் அவர்களை நாடுகடத்துவதற்கான நடைமுறைகள் மேற்கொள்ளப்படும் என அவர் கூறியதாக அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கத்வா சிறைச்சாலையில் ரோகிங்கியாக்களை, அடைக்கும் பணிக்காக, ஒரு வாரம் முன்பிருந்தே அங்கிருந்தவர்களை வேறு சிறைகளுக்கு மாற்றும் பணி நடைபெற்று வந்ததாக, தி இந்தியன் எக்ஸ்பிரஸ் கூறியுள்ளது.

சிறைச்சாலையில் அகதிகள் முகாம் அமைக்கப்பட்டதை அடுத்து, சனிக்கிழமை மாலை அந்தப் பகுதிக்கு, பேருந்துமூலம் அகதிகள் அழைத்து வந்து அடைக்கப்பட்டிருப்பதாக, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், அகதிகள் அனைவரும் சரியான ஆவணங்கள் இல்லாமல் ஜம்மூ &  காஷ்மீரில்  வசித்து வந்தனர் என தெரிவித்ததாக, தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்