பாலியல் சீண்டலுக்கு உள்ளான சிறுமி மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துக்கொண்டு தற்கொலைக்கு ஈடுபட்ட நிலையில் தீக்காயங்களோடு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
பீகார் மாநிலம் ஹமிர்பூர் பகுதியில், தொடர்ந்து பாலியல் சீண்டலுக்கு உள்ளான 15 வயது சிறுமி தீ வைத்துக் கொண்ட நிலையில் பலத்த தீக்காயங்களோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெரிவித்த ஹமிர்பூர் மாவட்ட காவல்கண்காணிப்பாளர் நரேந்திர குமார் சிங், “அந்தப் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுவனால் தொடர்ந்து பாலியல் சீண்டலுக்கு உள்ளாகி வந்த அந்தச் சிறுமி, மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துக்கொண்டு தற்கொலை செய்ய முயன்றுள்ளார்” என்று குறிப்பிட்டுள்ளதாகவும் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி கூறுகிறது.
ஆண்களுக்குள்ள உரிமை பெண்களுக்கு இருக்கிறதா? -பெண்ணுரிமை செயல்பாட்டாளர் மேரி டி சில்வா கேள்வி
மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்கு அனுமதிக்கப்படுவதற்கு முன் அந்தச் சிறுமியிடம் மாவட்ட நீதிபதி வாக்குமூலம் பெற்றுள்ளதாகவும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.