Aran Sei

சத்திஸ்கர் விவசாயிகள் மாநிலமா அல்லது விவசாயிகளைக் கொலை செய்யும் மாநிலமா ? – பாஜக கேள்வி

காங்கிரஸ் ஆளும் மாநிலமான சத்தீஸ்கரில்,  கடந்த 10 மாதத்தில் (2020 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 முதல் 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி 1 வரை)   141 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருருப்பதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

சத்தீஸ்கரின் சட்டமன்றத்தில்,  இதுவரை எத்தனை விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் எனவும் அவர்களது குடும்பத்தினருக்கு ஏதேனும் இழப்பீடு வழங்கப்பட்டு இருக்கிறதா எனவும் பாஜகவை சேர்ந்த கௌசிக் கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்குப் பதிலளித்த சத்தீஸ்கர் மாநில விவசாய அமைச்சர் ரவீந்திர சௌபே, ”கடந்த 10 மாதங்களில் 141 விவசாயிகள் தற்கொலை செய்திருக்கின்றர்.  மேலும் பயிர் மற்றும் நில ஆவணங்களில் தவறு செய்ததற்காக கோடாகான் மாவட்டத்தில் ஒரு அதிகாரி பணி இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.” என பதிலளித்ததாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

டிராக்டர் பேரணியில் உயிரிழந்தவரின் எக்ஸ்ரே படத்தை தர முடியாது – நீதிமன்றத்தில் காவல்துறை தகவல்

அமைச்சரின் பதிலை ஏற்காத கௌசிக், ”சத்திஸ்கர் விவசாயிகள் மாநிலமா அல்லது விவசாயிகளைக் கொலை செய்யும் மாநிலமா?” எனக் கேள்வி எழுப்பியதோடு, விவசாயிகளின் அனைத்து தற்கொலைகள் தொடர்பாகவும் முறையான விசாரணை நடத்தப்பட்ட வேண்டும்” எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.

மோடி அரசின் வேளாண் சட்டங்கள் காரப்பரேட் நிறுவனங்களுக்கு தான் பயன்பெறும் : சர்வதேச விவசாயிகள் சங்கங்கள்

விவசாயிகள் தற்கொலையை பாஜக அரசியலாக்கிறது எனக் குற்றம்சாட்டிய அமைச்சர் , ”பாஜகவின் 15 ஆண்டுகள் ஆட்சியிலும் விவசாயிகள் தற்கொலை நிகழ்ந்துள்ளது. அப்பொழுது எல்லாம் இழப்பிடு வழங்குவது குறித்து அவர்கள் கவலைப் பட்டார்களா?. துரதிருஷ்டவசமாக நடைபெற்ற மரணங்களில் எல்லாம் பாஜகவினர் அரசியல் ஆக்கிகுகின்றனர். தற்கொலைகள் எப்பொழுதும் விசாரிக்கப்படுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

இதன்பிறகு சட்டமன்றத்தில் அமளி ஏற்பட்டது,  இந்த அரசு விவசாயிகள் தற்கொலையை இழிவுபடுத்துகிறது எனக் குற்றம்சாட்டி பாஜகவினர் வெளிநடப்பு செய்துள்ளனர்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்