Aran Sei

சமூக வலைதளங்களில் தாலிபன்களுக்கு ஆதரவாக பதிவிட்டதாக புகார் – 14 பேரைக் கைது செய்த அசாம் காவல்துறை

ப்கானிஸ்தானை தாலிபன்கள் கைப்பற்றியதற்கு ஆதரவு தெரிவித்து சமூக வலைதளங்களில் பதிவிட்ட குற்றச்சாட்டின் பேரில் 14 பேரை அசாம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

வெள்ளி (ஆகஸ்ட் 19) இரவு இவர்கள் கைது செய்யப்பட்டதாகவும், கைது செய்யப்பட்டவர்கள்மீது சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு)ச் சட்டம், தகவல்தொழில்நுட்ப சட்டம் மற்றும் குற்றவியல் தடுப்புச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதியப்பட்டிருப்பதாக மூத்த காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.

”நாங்கள் விழிப்புடன் உள்ளோம் மற்றும் சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய பதிவுகளைக் கண்காணிக்க வருகிறோம்” என அவர் தெரிவித்தார்.

கம்ரூப் பெருநகரம், பர்பேட்டா, துப்ரி மற்றும் கரிம்கஞ்ச் மாவட்டங்களில் தலா 2 பேரும், தர்ராங், கச்சார், ஹைலகண்டி, தெற்கு சல்மாரா, கோபால்பாரா மற்றும் ஹோஜாய் மாவட்டங்களில் தலா ஒருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தேசப் பாதுகாப்புக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் சமூக வலைதளங்களில் தாலிபானுக்கு ஆதரவாக கருத்து தெரிவிப்பவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என துணை ஆய்வாளர் வயல்ட் பாருவா கூறினார்.

”நாங்கள் அத்தகைய நபர்கள்மீது கிரிமினல் வழக்குகள் பதிவு செய்கிறோம். இது போன்று ஏதாவது உங்கள் பார்வைக்கு வந்தால் தயவுசெய்து காவல்துறைக்கு தெரியப்படுத்துங்கள்” என அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

Source : The Indian Express

 

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்