Aran Sei

15 நாட்களில் ரூ.9.20 உயர்ந்த பெட்ரோல்: சென்னையில் லிட்டர் ரூ.110

பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு தலா 80 காசுகள் உயர்ந்துள்ளது. இதன்மூலம் கடந்த 15 நாட்களில் 13 முறை உயர்த்தப்பட்டு மொத்தமாக லிட்டருக்கு 9.20 ரூபாய் உயர்ந்துள்ளது.

நான்கு மாதங்களுக்கும் மேலான இடைவெளிக்குப் பிறகு இந்த விலை முதல் முறையாக மார்ச் 22 அன்று திருத்தப்பட்டது.

உள்ளூர் வரிகளுக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலை மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுகிறது.

இன்று (ஏப்ரல் 5), புதுடெல்லியில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 80 காசுகள் மீண்டும் உயர்த்தப்பட்டு, பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.104.61 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.95.87 ஆகவும் உள்ளது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்த எதிர்க்கட்சிகள் – மக்களவையிலிருந்து வெளிநடப்பு

சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 110.14 ஆகவும், டீசல் விலை ரூ.100.22 ஆகவும் உள்ளது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு உக்ரைன் ரஷ்யா போர் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து தான் காரணம் என சொல்லப்பட்டு வந்த நிலையில், கடந்த சில நாட்களாக தள்ளுபடி விலையில் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய்யை இந்தியா வாங்கி வருவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Source: ANI

 உணவுக்காக கையேந்தும் நிலைக்கு

இந்தியா வரும்.. Sasikanth Senthil Interview…

கூடுதல் தகவலுக்கு க்ளிக் செய்யவும்…

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்