Aran Sei

மகாராஷ்ட்ராவில் 13 நக்சல்கள் சுட்டுக்கொலை: தேடுதல் வேட்டை தொடருமென காவல்துறை அறிவிப்பு

காராஷ்ட்ராவின் கட்சிரோலி மாவட்டத்தில் காவல்துறையின் சி-60 கமாண்டோ படையினர்கள் 13 நக்சல்கள் சுட்டுக்கொன்றுள்ளனர் என்று அம்மாநில காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக, பேசிய கட்சிரோலி மாவட்ட காவல்துறை, “கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில், இன்று (மே 21) அதிகாலை 5.30 மணியளவில் எட்டப்பள்ளியில் உள்ள வனப்பகுதியில், சி-60 கமாண்டோ படையினர் வனப்பகுதியில் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர். அங்கு, நக்சல்கள் தங்களுக்குள் ஏற்பாடு செய்திருந்த ஒரு கூட்டத்திற்காக கூடியிருந்தனர்.” என்று தெரிவித்துள்ளது.

‘எங்கள் உடலசைவைக் கூட கண்காணிக்கும் காவல்துறை முகாம் வேண்டாம்’ – முகாமை அகற்றக்கோரிய போராட்டத்தில் பழங்குடியினரை சுட்டுக்கொன்ற பாதுகாப்பு படை

மேலும், “கமாண்டோக்களை கண்டதும் நக்சல்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். அதைத் தொடர்ந்து சி -60 கமாண்டோக்கள் பதிலடி கொடுக்க நடந்த துப்பாக்கிச் சூட்டில், 13 நக்சல்கள் கொல்லப்பட்டனர். இருபிரிவினருக்கு இடையேயான இந்த துப்பாக்கிச் சூடு ஒரு மணி நேரத்திற்கு நீடித்தது. அதன் பிறகு மீதமுள்ள நக்சல்கள் அடர்ந்த வனப்பகுதிக்குள் தப்பிச் சென்றனர்.” என்று கூறியுள்ளது.

சம்பவ இடத்தில் இருந்த நக்சல்களின் சடலங்களை அப்புறப்படுத்திய கமாண்டோகள், தேடுதல் வேட்டையை தொடர்ந்ததாகவும் குறிப்பிட்டுள்ளது.

Source; pti

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்