Aran Sei

புலம்பெயர்ந்த சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்க மாவட்ட ஆட்சியர்களுக்கு அதிகாரம் – மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு

பாகிஸ்தான், வங்காளதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளைச் சேர்ந்த 6 சிறுபான்மையினர் சமூகத்தினருக்கு குடியுரிமை வழங்கும் அதிகாரத்தைக் குஜராத், ராஜஸ்தான், ஹரியானா, பஞ்சாப் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களைச் சேர்ந்த 13 மாவட்ட ஆட்சியர்களுக்கு இந்திய  ஒன்றியத்தின் உள்துறை அமைச்சகம் வழங்கியுள்ளது.

இந்த அறிவிப்பானது 2016 மற்றும் 2018 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட உத்தரவுகளை மீண்டும் வலியுறுத்துகிறது. மேலும் இது இன்னும் நடைமுறை வராத  குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பானது அல்ல என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அலோபதியை விமர்சித்த பாபா ராம்தேவ்: நடவடிக்கை எடுக்கக்கோரி போராட்டத்தை அறிவித்த பயிற்சி மருத்துவர்கள்

மே 28 ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின் படி, இந்திய குடியுரிமை சட்டம், 1955 பிரிவு 5 மற்றும் 6ன் கீழ் குடியுரிமை வேண்டி விண்ணப்பித்துள்ள பாகிஸ்தான், வங்காளதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான்   நாடுகளைச் சேர்ந்த இந்து, சீக்கியம், பௌத்தம், ஜைனம், பார்சி மற்றும் கிறுஸ்துவ மதத்தைச் சேர்ந்த புலம்பெயர்ந்தவரகளுக்கு சட்ட பாதுகாப்பு கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் குடியுரிமை பெறுவதற்கு 11 ஆண்டுகள் தங்கியிருக்க வேண்டும் என விதியை 5 ஆண்டுகளாக தளத்தி இருப்பதன் மூலம், அந்த விண்ணப்பங்களை விரைவாக பரிசீலிக்கும் ஒரு வாய்ப்பை சிஏஏ உருவாக்கியுள்ளது.

புதிய உருமாறிய கொரோனா வைரஸ் – வியட்நாமில் பரவும் ஆபத்து

இந்தியக் குடியுரிமை வேண்டும் புலம்பெயர்ந்தவர்கள் என்று ஆன்லைனில் விண்ணப்பித்தால், மத்திய முகமை மற்றும் மாநில காவல்துறையினரின் பாதுகாப்பு சான்றிதழுக்கு பிறகு குடியுரிமை வழங்கப்படும் என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

பஞ்சாப் (ஜலந்தர் தவிர) மற்றும் ஹரியானா (பரிதாபாத்) உள்துறை செயலாளர்களுக்கும் குடியுரிமை வழங்கு அதிகாரத்தை அரசு வழங்கியுள்ளது.

Source : The Hindu

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்