பன்னிரண்டாம் வகுப்பு சிபிஎஸ்சி பொதுத் தேர்வுவை ரத்து செய்ய வேண்டும் என பிரதமர் மோடிக்கு திருவனந்தபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர் கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில், ”மாணவர்கள் பலர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்களுடன் போராட வேண்டியிருந்தது. சிலர் துரதிருஷ்டவசமாக கொரோனால் உயிரிழக்கவும் நேரிட்டுள்ளது. இத்தகைய அதிர்ச்சியில் இருக்கும் மாணவர்கள், அவர்களின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் தேர்வுகளை எதிர்கொள்ள வேண்டும் என எதிர்பார்ப்பது நியாமற்றது” என தெரிவித்துள்ளார்.
மேலும், தேர்வு மையங்களுக்குப் பயணம் மேற்கொள்ள நிர்பந்திக்கப்படும் மாணவர்கள் எதிர்கொள்ளும் சுகாதார சவால்களைச் சுட்டிக்காட்டியுள்ள சசி தரூர், ”கட்டுப்பாட்டு பகுதிகள் மற்றும் போக்குவரத்து தடை செய்யப்பட்டிருக்கும் பகுதியில் வசிக்கும் மாணவர்களுக்கு இது பெரும் சவாலாக இருக்கும்” என கூறியுள்ளார்.
‘பிராமணர்களுக்கு எதிரான தமிழக அரசை கலைக்க வேண்டும்’ – ஆளுநருக்கு சுப்ரமணியன் சுவாமி கடிதம்
”இந்தச் சூழ்நிலையில், அவர்கள் தேர்வை எதிர்கொள்ள வேண்டும், திறனை வெளிப்படுத்த வேண்டும் என எதிர்பார்ப்பது நியாயமற்றது. குறிப்பாக விதிவிலக்கான இந்தக் கடுமையான காலங்களில், மாணவர்களின் நல்வாழ்வு பாதுகாக்கப்படுவதை உறுதி செய்யும் கடமை நம் அனைவருக்கும் உள்ளது” என பிரதமர் மோடிக்கு எழுதியிருக்கும் கடிதத்தில் திருவனந்தபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர் குறிப்பிட்டுள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.