Aran Sei

தெலுங்கானா கலவரத்தில் 12 பேர் காயம், 50 பேர் கைது – அமித் ஷா விசாரித்தார்

தெலுங்கானா மாநிலம் நிர்மல் மாவட்டம் பைன்சா நகரில், இரண்டு குழுக்கள் கல்வீசி தாக்குதல் நடத்தியது மோதலாக வெடித்ததில் 12 பேர் காயமடைந்துள்ளனர். இது தொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விசாரித்ததாக மாநிலத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.

உள்ளூர் தகவலின் படி இரு சக்கர வாகனத்தில் வந்த இருவருக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதத்தில் பலர் இணைந்ததை அடுத்து இது மோதலாக மாறியது. இரு தரப்பினரும் கற்களை வீசித் தாக்கிக் கொண்டதோடு, பல வாகனங்களுக்குத் தீ வைக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த நகரின் ஜல்பேகர் கல்லி, கபீர் ரோடு, கணேஷ் ரோடு மற்றும் மேதார் ரோடு பகுதிகள் பாதிக்கப்பட்டிருக்கின்றன.

இது தொடர்பாக இந்தியா டுடேவிடம் பேசிய, நிர்மல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், ”சிசிடிவி காட்சிகளைக் காவல்துறை ஆய்வு செய்து வருகிறது. நகரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதோடு, சுமார் 50 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.” என்று கூறியுள்ளார்.

விவசாயிகள் போராட்ட களத்தில் சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டம் – மேடையேறி உரை நிகழ்த்திய பெண் விவசாயிகள்

இதற்கிடையில், தெலுங்கானா அமைச்சர் கே.டி.ராமா ராவ், மக்கள் அமைதி காப்பதோடு, பிளவுபடுத்தும் சக்திகளின் வதந்திகளுக்கு இரையாகிட வேண்டாம் என ட்வீட் செய்துள்ளார்.

மற்றொரு புறம் அம்மாநிலத்தை சேர்ந்த மத்திய உள்துறை இணையமைச்சர் ஜி.கிஷன் ரெட்டி, ”அமித் ஷா தன்னை தொடர்பு கொண்டு, பைன்சாவில் நடைபெற்ற கலவரம்குறித்தும் தற்போது நிலவி வரும் சூழல் குறித்தும் விசாரிக்கச் சொன்னார்” என ட்வீட் செய்துள்ளார்.

இதற்கிடையில், பைன்சா நகராட்சி நிர்வாகம் எம்ஐஎம் கட்சியால் நிர்வகிப்படுவதால், கலவரத்திற்கு எம்ஐஎம் கட்சியினர் தான் காரணம்  நிஜாமாபாத் நாடாளுமன்ற உறுப்பினரும், பாஜகவை சேர்ந்தவருமான தர்மாபுரி அரவிந்த் தெரிவித்துள்ளார்.

Source : PTI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்