Aran Sei

‘மேகலயாவில் 12 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கட்சித்தாவல்’ – வீழ்கிறதா காங்கிரஸ்

மேகாலயாவில் காங்கிரஸ் கட்சியின் எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வருமான முகுல் சங்மா உள்பட 12 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளனர்.

பாஜகவுக்கு எதிராக திரிணாமுல் காங்கிரஸ் நடத்தும் போரில் சேர விரும்பும் பிற கட்சிகளைச் சேர்ந்த அரசியல் தலைவர்களை தனது கட்சி வரவேற்கும் என்று மம்தா பானர்ஜி கூறியிருந்தார்.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு 17 எம்எல்ஏக்கள் இருக்கும் நிலையில் அதில் 12 பேர் திரிணமூல் காங்கிரஸில் சேர்ந்துவிட்டனர்.

‘ஒருத்தரைக் கீழ இறக்கி மேல ஏற ஆசப் பட மாட்டேன்!’ – `கானா’ இசைவாணியின் வெளியேற்றமும், தட்டிக் கேட்காத `மய்யம்’ கமல் ஹாசனும்!

2023ம் ஆண்டுதான் மேகாலயாவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்க இருக்கும் போது காங்கிரஸ்கட்சியிலிருந்து 17 பேரில் 12 எம்எல்ஏக்கள் திரிணமூல் காங்கிரஸில் சேர்வது காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவாகும். கட்சி தாவல் சட்டத்தின் கீழும் இந்த நடவடிக்கை வராது, மூன்றில் 2 பங்கு எம்எல்ஏக்கள் வேறு ஒரு கட்சிக்கு செல்லும்போது இது கட்சித் தாவல் சட்டத்திலும் நடவடிக்கை எடுக்க முடியாத நிலையில் காங்கிரஸ் இருக்கிறது.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் சுமூகமான உறவைப் பகிர்ந்து கொள்வதாக அறியப்பட்ட மம்தா பானர்ஜி, இந்த முறை அவரை  டெல்லியில் சந்திக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து கேட்டதற்கு. சோனியா காந்தியிடம் சந்திப்பு எதுவும் கேட்கவில்லை, ஏனெனில் அவர்கள் பஞ்சாப் தேர்தலில் பணிநிமித்தமாக  உள்ளார். ஒவ்வொரு முறையும் சோனியாவை நான் ஏன் சந்திக்க வேண்டும்? அது அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டது அல்ல என்றும் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

மூன்று விவசாய சட்டங்களை திரும்பப் பெறும் மசோதா: ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்

திரிபுரா, கோவா ஆகிய மாநிலங்களில் அடுத்த கட்ட சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தனது எல்லையை விரிவுபடுத்த முயற்சித்து வருகிறது. திரிபுராவில், உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்னதாக, மாநிலத்தின் ஆளும் பாஜகவுடன் அக்கட்சிக்கு மோதல் ஏற்பட்டுள்ளது.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் உதவியாளர் அசோக் தன்வார், ஜனதா தளத்தின் மாநிலங்களைவை உறுப்பினர் பவன் வர்மா உள்ளிட்டோர் திரிணாமூல் கட்சியில் இணைந்துள்ளனர்.

Source: ndtv.com

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்