மஹாராஷ்டிரா மாநிலம், யவத்மால் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் போலியோ சொட்டு மருந்திற்கு பதிலாகச் சானிடைசர் வழங்கப்பட்டு இருக்கிறது என அம்மாநில அதிகாரி நேற்று தெரிவித்துள்ளதாக (பிப்ரவரி 1) என்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் அனைவரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டதில் உடல் நிலை சீராக இருப்பதாகவும், கவனக்குறைவாகச் செயல்பட்ட மூன்று சுகாதார பணியாளர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட அதிகாரி தெரிவித்ததாக அதில் குறிப்பிட்டப்பட்டுள்ளது.
மியான்மர் இராணுவப் புரட்சி – ஆட்சிகள் மாறியும் காட்சிகள் மாறவில்லை
ஜனவரி 31 ஆம் தேதி நடைபெற்ற தேசிய போலியோ சொட்டு மருந்து முகாமின் பொழுது, இந்தச் சம்பவம் அரங்கேறியது என அதிகாரிகள் தெரிவித்து இருப்பதாக என்டிடிவி கூறியுள்ளது.
யவத்மால் ஜில்லா பரிஷத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்ரீகிருஷ்ணா பஞ்சால் கூறியதாக, 5 வயதுக்குட்பட்ட 12 குழந்தைகளுக்குப் போலியோ சொட்டு மருந்திற்கு பதிலாகச் சானிடைசர் வழங்கப்பட்டதாகவும், அதில் ஒரு குழந்தைக்கு மட்டும் வாந்தி மற்றும் அசௌகரியம் ஏற்பட்டதாகத் தெரிவித்தாரென அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சானிடைசர் வழங்கப்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்டு, யவத்மா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, நிலைமை சீரானதோடு, கண்காணிப்பில் உள்ளது எனப் பஞ்சால் தெரிவித்தாக அதில் கூறப்பட்டுள்ளது.
முதல் கட்ட தகவலின் படி சம்பவம் நிகழ்ந்த நேரத்தில், ஆரம்ப சுகாதார நிலையத்தில், 3 ஆரம்ப சுகாதார ஊழியர்கள், ஒரு மருத்துவர், அங்கன்வாடி ஊழியர் மற்றும் ஒரு ஆஷா தன்னார்வலர் இருந்ததாகவும், விசாரனையின் முதற்கட்டமாக மூன்று சுகாதார ஊழியர்களையும் இடைநீக்கம் செய்ய உத்தரவு பிறப்பட்டு இருக்கிறது எனப் பஞ்சால் கூறியதாக என்டிடிவி தெரிவித்துள்ளது.
கார்ப்பரேட்டுகளுக்கு நாட்டைக் கூறுபோட்டு விற்கும் வெகுமக்கள் விரோத பட்ஜெட் – திருமாவளவன் கண்டனம்
இந்தச் சம்பவத்தால் அதிர்ச்சியில் இருக்கும் பெற்றோர்கள், கவனக்குறைவாகச் செயல்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரி இருப்பதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
யவத்மால் ஆட்சியர் எம்.டி.சிங், அரசு மருத்துமனைக்கு வருகை தந்து, நிலைமையைக் கேட்டறிந்ததாக அதிகாரிகள் தெரிவிப்பதாக என்டிடிவி கூறியுள்ளது.க்ஷ்க்ஷ்
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.