செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 11 நோயாளிகள் திடீரென உயிரிழந்துள்ளதாக இறந்தவர்களின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்தபடியாகச் செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.
மேலும், செங்கல்பட்டில் நாளொன்றுக்கு சுமார் ஆயிரத்து 500 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். அது மட்டுமல்லாது , செங்கல்பட்டு மருத்துவமனையில் கொரோனா பாதிப்படைந்தோர் பெரும் எண்ணிக்கையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், நேற்றிரவு 11 நோயாளிகள் திடீரென உயிரிழந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. அவர்கள் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்துள்ளதாக உறவினர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.
தடுப்பூசிகளை உடனே வழங்க பிரதமருக்கு முதல்வர் கடிதம் – தமிழகத்தில் தடுப்பூசி தட்டுப்பாடா?
இந்தச் சம்பவத்தை அடுத்து தகவலறிந்து மருத்துவமனைக்கு வந்த மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ், நோயாளிகள் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்ததாகக் கூறப்படுவது குறித்து விசாரித்து வருவதாக தெரிவித்துள்ளார்.
மேலும், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை எதுவும் இல்லை என்றும் மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ் கூறியுள்ளார்.
SOURCE; PUTHIYATHALAIMURAI
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.