Aran Sei

‘கொரோனாவால் நாடு முழுவதும் 109 சுகாதார பணியாளர்கள் உயிரிழந்துள்ளனர்’ – ஒன்றிய அரசு தகவல்

நாடு முழுவதும் கொரோனா பெருந்தொற்று​​ தொடங்கிய காலத்தில் இருந்து, 2021 ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் வரை, அங்கீகரிக்கப்பட்ட சமூக சுகாதார ஆர்வலர்கள் (ஆஷா) தங்கள் பணியின்போது 109 பேர் இறந்துள்ளனர் என்று ஒன்றிய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக, மாநிலங்களவையில் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த உறுப்பினர் சஞ்சய் சிங், ஒன்றிய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்திடம் எழுப்பிய கேள்வியில், “கொரோனா பெருந்தொற்று​​ தொடங்கிய காலத்தில் தொடங்கி, தங்கள் பணியின்போது இறந்த அங்கீகரிக்கப்பட்ட சமூக சுகாதார ஆர்வலர்களின் (ஆஷா பணியாளர்கள்) எண்ணிக்கை மாநில வாரியாக எத்தனை? பிரதான் மந்திரி கரிப் கல்யாண் தொகுப்பு திட்டத்தின் கீழ் நாட்டில் உள்ள முன்களப்பணியாளர்களுக்கான ரூ. 50 லட்சம் காப்பீடு வழங்குவதாக அரசு அறிவித்திருந்தது நடைமுறையில் இருக்கிறதா?” என்று கேள்விகளை எழுப்பியுள்ளார்.

‘ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் ஏற்பட்ட மரணம் குறித்த ஒன்றிய அரசின் அறிக்கை பொய்யானது’ – சத்தீஸ்கர் சுகாதார அமைச்சர்

மேலும், ஆம் என்றால், அதன்படி, இதுவரை பயனடைந்த ஆஷா பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் விவரங்கள் என்ன என்று சஞ்சய் சிங் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதற்கு பதிலளித்துள்ள ஒன்றிய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் பாரதி பிரவின் பவார், “நாடு முழுவதும் கொரோனா பெருந்தொற்று ​​தொடங்கிய காலத்தில் இருந்து, 2021 ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் வரை, தங்களின் தொற்று தடுப்பு பணியின்போது, அங்கீகரிக்கப்பட்ட சமூக சுகாதார ஆர்வலர்கள் (ஆஷா பணியாளர்கள்) 109 பேர் இறந்துள்ளனர். ஜூலை 28 ஆம் தேதி வரை, பிரதான் மந்திரி கரிப் கல்யாண் தொகுப்பு திட்டத்தின் கீழ் இறந்த இந்த ஆஷா பணியாளர்கள் 69 பேருக்கு ரூ. 50 லட்சம் காப்பீடு வழங்கப்பட்டுள்ளது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடுப்பு மருந்து மையத்தில் பிரதமரின் படம் இல்லையென பாஜகவினர் போராட்டம் – கீழ்த்தரமான அரசியல் என விமர்சித்த ஒடிசா சுகாதாரத்துறை அமைச்சர்

அதிகப்பட்சமாக மத்திய பிரதேசத்தில் 16 ஆஷா பணியாளர்களும், அதற்கடுத்தப்படியாக குஜராத்தில் 15 ஆஷா பணியாளர்களும்,  சத்தீஸ்கரில் 12 ஆஷா பணியாளர்களும் இறந்துள்ளனர். தமிழ்நாட்டில் எந்த உயிரிழப்பு ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்