Aran Sei

ஒரே நாளில் 30 லட்சம் பேர் பங்கேற்ற ஹரித்வார் கும்பமேளா : நான்கு நாட்களில் 1086 கொரோனா தொற்றுகள்

ப்ரல் 10-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 13-ம் தேதி மாலை 4 மணி வரை, உத்தரகாண்ட் மாநிலத்தின் ஹரித்வாரில் கும்பமேளா நடைபெறும்  பகுதியில், 1,086 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இந்நிலையில், அடுத்த புனித நீராடல் நிகழ்ச்சி இன்று (ஏப்ரல் 14) திட்டமிடப்பட்டுள்ளது.

ஏப்ரல் 12-ம் தேதி நடந்த இரண்டாவது புனித நீராடலில் 30 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் பங்கேற்றதாக மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், ஹரித்வார், டேராடூன், பௌரி, தெஹ்ரி உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு நகரங்களில் 387 தொற்றுகள் பதிவாகியுள்ளன. அன்று கும்பமேளா பகுதியில் மொத்தம் 66,203 தொற்று சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.

கொரோனா – தப்லீகி ஜமாத்தை பழித்த பாஜகவும் ஊடகங்களும் மகா கும்பமேளா கூட்டம் பற்றி என்ன சொல்கின்றன?

கும்பமேளா நடைபெறும் பகுதியில் ஏப்ரல் 10-ம் தேதி 115 தொற்றுகள் பதிவாகியுள்ளன. அடுத்த 3 நாட்களான, ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 13-ம் தேதி வரை 961 கொரோனா தொற்றுகள் பதிவாகியுள்ளதாக ஹரித்வார் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் எஸ்.கே. ஜா தெரிவித்துள்ளார். அதாவது ஒரு நாளுக்கு சராசரியாக 300-ஐ விட அதிக தொற்றுகள் கண்டறியப்பட்டுள்ளன.

உத்தரகாண்ட் மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில், மாநிலத்தில் நேற்று (ஏப்ரல் 13) மட்டும் 13 கொரோனா இறப்புகளும், மொத்தம் 1,925 புதிய தொற்றுகளும் பதிவாகியுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்மாநிலத்தின் மொத்த மக்கள் தொகை 1 கோடி மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

Source : Indian Express

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்