Aran Sei

பொருளாதார நெருக்கடியால் மூடப்படும் 10113 நிறுவனங்கள் – கொரோனா தொற்று எதிரொலி

டந்த ஏப்ரல் 2020 ஆண்டில் இருந்து பிப்ரவரி மாதம்வரை நடப்பு நிதி ஆண்டில் 10,000 மேற்பட்ட தொழிற்துறை நிறுவனங்கள் தாமாக முன்வந்து மூட விண்ணப்பித்துள்ளன என்று தி எகனாமிக் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

மத்திய பெருநிறுவனங்கள் விவகாரத்துறை அமைச்சகம் (Ministry Of Corporate Affairs) வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, நடப்பு நிதி ஆண்டில் பிப்ரவரி மாதம்வரை 10113 நிறுவனங்கள், பெருநிறுவன சட்டம்,2013 (companies act 2013) பிரிவு 248(2) யின் படி தாமாக முன்வந்து மூட விண்ணப்பித்து இருக்கிறது என்று அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதிய உச்சத்தை தொட்டது பெட்ரோல், டீசல் விலை – மத்திய, மாநில அரசுகள் வரியை குறைக்க எண்ணெய் நிறுவனங்கள் கோரிக்கை

பிரிவு 248(2) ன் படி தொழிற்துறை நிறுவனங்கள் எந்த வித சட்ட நடவடிக்கைகளுக்கும் ஆளாகாமல் தாமாக முன் வந்து மூடலாம் என்று குறிப்பிடுகிறது.

இதன்படி பெருநிறுவனங்கள் சட்டப்பிரிவு 248(2) ன் கீழ் தங்கள் நிறுவனங்களை மூட விண்ணப்பித்திருப்பதாகவும் தி எகனாமிக் டைம்ஸ் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நிதி நெருக்கடியில் டெலிகிராம் – 2021 முதல் கட்டணம் விதிக்க முடிவு?

இது குறித்து மக்களவைக்கு எழுத்து மூலம் பதிலளித்துள்ள மத்திய பெருநிறுவனங்கள் விவகாரத்துறை இணை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் ”இதுவரை எத்தனை நிறுவனங்கள் மூடப்பட்டிருக்கிறது என்பது குறித்து சரியான புள்ளிவிவரம் அமைச்சகத்திடம் இல்லை” என்று குறிப்பிட்டுள்ளதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இதுவரை 10113 நிறுவனங்கள் தாமாக முன்வந்து மூட விண்ணப்பித்திருக்கிறது என்றும் இணை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் குறிப்பிட்டுள்ளதாக தி எகனாமிக் டைம்ஸ் செய்தி கூறுகிறது.

கொரானா ஊரடங்கு தளர்விற்குப் பிறகு – வணிக நிறுவனங்கள் 24 மணி நேரம் செயல்பட அனுமதித்த கர்நாடகா

மத்திய அமைச்சர் வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களின் அடிப்படையில் டெல்லயில் 2394 நிறுவனங்களும், உத்திர பிரதேசத்தில் 1936 நிறுவனங்களும் மூடப்பட இருப்பதாகவும், ராஜஸ்தான், கேரளா, தமிழ்நாடு என இந்தியாவின் பெரும்பான்மையான மாநிலங்களிலில் உள்ள நிறுவனங்கள் தாமாக மூட விண்ணப்பித்து இருக்கிறது என்றும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொரோனா காலத்தில் ஏற்பட்ட நிதி நெருக்கடி காரணமாக தொழிற்துறை நிறுவனங்கள் இந்த முடிவை எடுத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்