Aran Sei

தொண்டாமுத்தூர் தொகுதியில் ஒரே வீட்டில் நூற்றுக்கணக்கான வாக்காளர்கள் – சர்ச்சையான தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல்

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் தொகுதியில் ஒரே வீட்டில் நூற்றுக்கணக்கான வாக்காளர் வசிப்பதாகத் தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியலில் வெளியிட்டு இருப்பது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

சட்டப்பேரவை நடக்கும் மாநிலங்களில் வாக்காளர் பட்டியலில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதாக எதிர்கட்சிகள் தொடர்ந்து புகார்கள் எழுப்பி வருகின்றன. அண்மையில் கேரளாவில் பல வாக்காளர்களுக்கு இரண்டு வாக்குகள் இருந்ததாக எழுந்த புகாரில் ஒருவருக்கு ஒரு வாக்கு மட்டுமே என்பதை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும் என அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் வெளியிட்டுருக்கும் தமிழக வேட்பாளர் பட்டியலில், ஒரே வீட்டில் நூற்றுக்கணக்கான வாக்காளர் வசிப்பதாக தகவல்கள் இடம்பெற்று இருக்கின்றன.

Credit : https://www.elections.tn.gov.in/rollpdf/PdfDownload.aspx

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்கான வாக்காளர் பட்டியலில், பாகம் எண் 51ல், 3-ஈஷானவிகார் வாக்குச்சாவடி எண் 5க்கு உட்பட்ட வாக்காளர் பட்டியலில் 146 கீழ் 1, 147 கீழ் 2 பல வாக்காளர் வசிப்பதாக இடம்பெற்றுள்ளதுசர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்