Aran Sei

உத்தரபிரதேசத்தில் கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சிறுமி தற்கொலை – குற்றச்சாட்டப்பட்டவர் காவலரால் சுடப்பட்டு மரணம்

த்தரப்பிரதேசத்தில் 10 ஆம் வகுப்பு படித்து வந்த சிறுமியைக் கூட்டுபாலியல் வன்கொடுமை செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்டவர் நீதிமன்றத்துக்குக் கொண்டுசெல்லும் வழியில் தப்பிக்க முயன்றதால் காவல்துறையால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக என்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது.

“மகளிர் உரிமையைப் பாதுகாக்க தேர்தல் களத்தில் சனாதன சக்திகளை வீழ்த்துவோம்” – திருமாவளவன்

உத்தரப்பிரதேச மாநிலம், மீரட் பகுதியில் பத்தாம் வகுப்புச் சிறப்பு வகுப்பிற்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த சிறுமி மீது பக்கத்துக்குக் கிராமத்தைச் சேர்ந்த 4 நபர்கள் கூட்டுப்பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளதாக அந்தச் செய்தியில் குறிப்பிட்டுள்ளது

இந்நிலையில், மனமுடைந்த அந்தத் சிறுமி தற்கொலை செய்துகொண்டதாகவும், அவர் எழுதி வைத்திருந்த தற்கொலைக் கடிதத்தின் அடிப்படையில் பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த இருவரை காவல்துறை கைது செய்ததாக என்.டி.டி.வி செய்தி கூறுகிறது.

நடைமுறையில் இல்லாத 66ஏ பிரிவின் கீழ் வழக்குப் பதிவு – உத்தரப்பிரதேச அரசுக்கு நீதிமன்றம் கண்டனம்

இந்நிலையில், கைது செய்யப்பட்ட லக்சன், விகாஸ் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தக் கொண்டுசென்றபோது, லக்சன் காவல்துறையிடமிருந்த துப்பாக்கியைப் பிடுங்கி தப்பிக்க முயன்றதாகவும், அப்போது காவலர் ஒருவரின் காலில் சுட்டதாகவும் அந்தச் செய்தி கூறுகிறது.

சுற்றித்திரியும் பசுகளுக்கு 20 பாதுகாப்பு முகாம் – 12 கோடி ஒதுக்கிய உத்தரப்பிரதேச அரசு

இந்நிலையில் எதிர் தாக்குதல் நடத்த காவல்துறை சுட்டபோது லக்சன் மரணமடைந்தாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக என்.டி.டி.வி செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள உத்தரபிரதேச முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ், “மற்ற மாநிலங்களில் தேர்தல் பரப்புரையில் ஈடுபடும் உத்தரபிரதேச முதலமைச்சர் இதுகுறித்தும் கவனம் செலுத்த வேண்டும் ” என யோகி ஆதித்யநாத்தின் ஆட்சி குறித்து கூறியுள்ளார்.

 

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்