Aran Sei

கோயிலில் தண்ணீர் குடித்ததால் தாக்கப்பட்ட இஸ்லாமிய சிறுவன்: சிறுவனின் கல்விக்கு நிதியளித்த பொதுமக்கள்

ண்ணீர் தாகம் எடுத்ததால் இந்து கோவிலுக்குள் சென்று நீர் அருந்தியதற்காக தாக்கப்பட்ட இஸ்லாமிய சிறுவனின் குடும்பத்திற்கும் கல்விக்கும் ரூ.10 லட்சம் நிதி திரட்டப்பட்டுள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள காசியாபாத் மாவட்டதின் தாசனா பகுதியில்  இருந்த இஸ்லாமிய சிறுவனுக்கு  தாகம் எடுத்ததால் தண்ணீர் அருந்த கோவிலுக்குள் சென்றவனை ஷிரங்கி நந்தன் யாதவ் என்பவர் கொடூரமாக தாக்கினார்.

அதுமட்டுமல்லாது, அச்சிறுவன், சிவ லிங்கத்தின் மீது சிறுநீர் கழிக்கமுயன்றார் அதனாலேயே தாக்கியதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

கோயிலில் தண்ணீர் குடித்ததற்காக தாக்கப்பட்ட இஸ்லாமிய சிறுவர் – #sorryAsif ஹேஷ்டாக் மூலம் சிறுவனுக்கு துணைநிற்கும் மக்கள்

சிறுநீர் கழிக்கும் காணொளி என்று கூறி 2018 ஆம் ஆண்டு ஆந்திராவில் சிறுவன் ஒருவன் சிவலிங்கத்தின் மீது சிறுநீர் கழித்த காணொளியையும் போலியாக பரப்பினார்.

இந்நிலையில், உண்மைச் சரிபார்ப்பு வலைத்தளமான ஆல்ட்நியூஸின் இணை நிறுவனர் ஒருவரால், அச்சிறுவனின் குடும்பத்திற்கும் கல்விக்கும் பொது மக்களிடமிருந்து நிதி திரட்டப்பட்டுள்ளதாக இணைய வழியாக நிதிதிரட்டல்களை செய்யும் கெட்டோ வலைதளம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இரண்டு நாட்களில், 648 பேரின் பங்களிப்புடன் தோராயமாக 10 லட்சம் ரூபாய் திரட்டப்பட்டுள்ளதாக அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தண்ணீர் குடிக்க கோவிலுக்குள் சென்ற இஸ்லாமிய சிறுவன் – தாக்கியவருக்கு ஜாமீன்

“அச்சிறுவன் ஒரு ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவர். தனது கல்வியின் வழியாக தன் குடும்பத்தின் நிலையை மாற்ற முடியும் என்று நம்பிக்கையுடன் இருக்கிறார். 2 நாட்களுக்குள் நாங்கள் கெட்டோ வழியாக தோராயமாக 10 லட்சம் ரூபாய் திரட்டியுள்ளோம். இந்நிதியானது அச்சிறுவனின் எதிர்காலத்தைப் பாதுகாக்கவும், பொருளாதார அடிப்படையில் அக்குடும்பத்திற்கு ஒரு நிலைதன்மையை கொடுக்க உதவும்.” என்று ஆல்ட்நியூஸ் இணை நிறுவனர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Source : PTI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்