Aran Sei

அதிமுக பிரமுகர் வாகனத்தில் ஒரு கோடி ரூபாய் பறிமுதல் – திருச்சியில் தேர்தல் பறக்கும் படை நடவடிக்கை

திருச்சிராப்பள்ளி மாவட்டம் பெட்டவாய்த்தலை சோதனைச் சாவடி அருகே ரூ. 99.73 லட்சம் மதிப்பிலான பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ஸ்ரீரங்கம் தொகுதி பெட்டவாய்த்தலை சோதனை சாவடி அருகே தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, அந்த வழியாக வந்த காரில் சாக்குப்பையில் ரூ. 99.73 லட்சம் பணம் இருந்ததை கண்டறிந்துள்ளனர். உரிய  ஆவணங்களின்றி பணம் எடுத்துச் செல்லப்பட்டதை அடுத்து அந்தப் பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினர், இது தொடர்பாகக் காரில் வந்த நான்கு பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பணம் எடுத்தவர பயன்படுத்தப்பட்ட வாகனம் ராமமூர்த்தி  என்பவர் பெயரில் பதியப்பட்டிருப்பதாகவும், வாகனத்தில் அதிமுக கொடி இருந்ததாகவும், அதிகாரிகள் தெரிவித்தனர்.

விவசாய சட்டங்களை நீக்க கோரி பாரத் பந்த்: ஆந்திர மாநில அரசு ஆதரவு

கைப்பற்றப்பட்ட பணம் ஸ்ரீரங்கம் தாலுக்கா அலுவலகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டிருப்பதாகவும், விசாரணைக்காகக் காரில் வந்த நால்வரும் தாலுக்கா அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

கணக்கில் காட்டப்படாத பணம் கைப்பற்றப்பட்டிருப்பது தொடர்பாக, வருமான வரித்துறை அதிகாரிகளிடமும், மாவட்ட தேர்தல் அதிகாரியான மாவட்ட ஆட்சியரிடமும் அறிக்கைகள் அளிக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Source : The Hindu

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்