Aran Sei

கொரோனா பொதுமுடக்கத்தில் 1.20 லட்சம் பேர் சாலைவிபத்தில் உயிரிழப்பு – தேசிய குற்ற ஆவணக்காப்பகம் தகவல்

டந்தாண்டு கொரோனா பொது  முடக்கம் நடைமுறையில் இருந்த அதேவேளையில் 1.20 லட்சம் பேர் “சாலை விபத்துக்கள் தொடர்பான அலட்சியத்தின் காரணமாக” இறந்துள்ளதாக தேசிய குற்ற ஆவணக்காப்பகத்தின் புள்ளிவிவரங்களின் அடிப்படையில் தெரியவந்துள்ளது.

மேலும், கடந்தாண்டு ஒருநாளைக்கு   சராசரியாக 328 பேர் சாலைவிபத்தில் உயிரிழந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

புறவாசல் வழியே கல்விச் சேர்க்கை நடைபெறுவதை தடுக்க வேண்டும் – டெல்லி உயர்நீதி மன்றம்

கடந்த மூன்று ஆண்டுகளில் “சாலை விபத்துக்கள் தொடர்பான அலட்சியத்தின்  காரணமாக” 3.92 லட்சம் பேர் உயிரிழந்துள்ளதாகவும், முறையே 2020 ஆம் ஆண்டு  1.20 லட்சம் பேரும்,  2019 ல்  1.36  லட்சம் பேரும், 2018ல்  1.35 பேரும் உயிரிழந்துள்ளதாக லட்சம்  தேசிய குற்ற ஆவணக்காப்பகத்தின் அறிக்கையில்  கூறப்பட்டுள்ளது.

மேலும், கடந்த 2018 ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரை  விபத்து ஏற்படுத்தி விட்டு தப்பிச் சென்றதாக  1.35 லட்சம் வழக்குகள் பதியப்பட்டுள்ளன.

‘ஜனநாயகத்தின் அனைத்து தூண்களையும் பலவீனப்படுத்துவதுதான் பாஜகவின் சித்தாந்தம்’ – காங்கிரஸ் விமர்சனம்

அதுமட்டுமல்லாது, வேகமாக அல்லது அலட்சியமாக வாகனம் ஒட்டியத்தின் காரணமாக விபத்து ஏற்படுத்தியது தொடர்பாக கடந்தாண்டு 1.30 லட்சம் பதிவகியுள்ளதகவும் தேசிய குற்ற ஆவணக்காப்பகத்தின் புள்ளிவிவரங்களின் அடிப்படையில் தெரியவந்துள்ளது.

Source: THE INDIAN EXPRESS

 

 

 

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்