கடந்த நான்கு ஆண்டுகளில் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் சட்டத்தின் கீழ் பல்வேறு திட்டங்களின் கீழ் 935 கோடி முறைதவறி கையாளப்பட்டுள்ள விவகாரத்தில் ஊழல் நடைபெறுவதை கண்காணிக்காததற்கு அரசே பொறுப்பு என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
கடந்த 2017-18 ஆம் ஆண்டு முதல் 2020-21 நிதியாண்டு வரை மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் சட்டத்தின் கீழ் பல்வேறு திட்டங்களின் கீழ் 935 கோடி முறைதவறி கையாளப்பட்டுள்ளது சமுக தணிக்கை அலகுகளின் வாயிலாக கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில், இதுகுறித்து தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் பவன் கேரா, சமுக தணிக்கை அலகுகளின் வாயிலாக தெரியவந்துள்ள இந்த தகவலானது, பெரும்பாலும் நிதி முறைதவறிக் கையாளப்பட்டது தான். இது லஞ்சம்,அதிகவிலை கொடுத்து மூலதனப்பொருட்கள் வாங்கியது, கணக்கில் இல்லாத நபருக்குப் பணம் வழங்கியது ஆகியவற்றால் நடந்தேறியுள்ளது என்றும் கூறியுள்ளார்.
மேலும், “மோடி அரசின் பொறுப்பின்மை மற்றும் அக்கறையின்மையின் காரணமாக நடந்தேறியுள்ளது” என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
எனவே, முறைகேடாக கையாளப்பட்ட நிதியைக் கைப்பற்றி கொரோனா தொற்றுக்காலத்தில் முறையற்ற கொரோனா மேலாண்மையினால் பாதிக்கப்பட்ட ஏழை மற்றும் விளிம்பு மக்களுக்குப் பயன்படுத்தவேண்டுமெனவும் காங்கிரஸ் கட்சியினர் கோரியுள்ளனர்.
source:தி இந்து
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.