Aran Sei

குரானில் சில வாசகங்களை நீக்கச் சொல்லி மனு – 50 ஆயிரம் அபராதத்துடன் வழக்கைத் தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்

ஸ்லாமியர்களின் புனித நூலான குரானில் உள்ள சில வாசகங்களை நீக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட மனுவைத் தள்ளுபடி செய்தும், மனுதாரருக்கு 50 ஆயிரம் அபராதமும் விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குரானில் உள்ள 26 வாசகங்களை நீக்க வேண்டும் என உத்திரபிரதேச ஷியா வக்ஃப் வாரியத்தின் தலைவர் சயித் வாசிம் ரிஸ்வி தாக்கல் செய்த மனுவில் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

ரிஸ்வி தனது மனுவில், ”இந்த 26 வாசகங்கள் உண்மையான வாசகங்கள் இல்லை. இந்த வாசகங்கள் இம்மண்ணிற்கான சட்டங்களுக்கு எதிராக இருப்பதோடு, குரானை ஏற்காதவர்கள் மற்றும் பொதுமக்கள்மீதான தாக்குதலை நியாயப்படுத்துகிறது” என கூறியிருந்தார்.

சூரப்பா எங்கு சென்றாலும் நோட்டீஸ் அனுப்பப்படும் – விசாரணை ஆணையம் அறிவிப்பு

மனுவை ‘மிகவும் அற்பமானது’ என கூறிய மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு, ”நீங்கள் இந்த மனுவைத் தீவிரமாக வலியுறுத்துகிறீர்களா?” என கேள்வி எழுப்பியுள்ளது.

அந்த மனுவில், இந்த வாசகங்கள் “அரசியலமைப்புக்கு முரணானது, பயனற்றது மற்றும் செயல்படாதது” என அறிவிக்கப்பட வேண்டும். இவை தீவிரவாதம் மற்றும் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கின்றன. மேலும், இந்த நாட்டின் இறையாண்மை, ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டிற்கு கடுமையான அச்சுறுத்தலை முன்வைத்துள்ளன என குறிப்பிடப்பட்டிருந்தது.

வேட்பாளர்களை விலைக்கு வாங்குகிறதா பாஜக? – பயத்தில் வேட்பாளர்களை பத்திரப்படுத்தும் எதிர்கட்சிகள்

மதரஸாக்கள் குழந்தைகளுக்கு இந்த வசனங்களைக் கற்பிக்கின்றன என வாதிட்ட மனுதாரர், இது “எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு வழிவகுக்கிறது. இதை, மத்திய அரசு தடைசெய்ய உத்தரவிட வேண்டும்” என்று கோரிக்கை விடுத்திருந்தார். மத நல்லிணக்கத்திற்கு எதிராக உள்ளதாக கூறி இந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டு, மனுதாரர்க்கு 50,000 ரூபாய் அபராதம் விதித்துள்ளது

முன்னதாக, தேசிய சிறுபான்மையினர் ஆணையம் மனுதாரருக்கு மத நல்லிணக்கத்தை சீர்குலைக்க முயற்சிப்பதாக குற்றம் சாட்டி நோட்டீஸ் அனுப்பியது, மேலும் மன்னிப்பு கேட்குமாறு கேட்டுக் கொண்டிருந்தது.

Source : NDTV

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்