Aran Sei

மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கதேசத்தில் போராட்டம் – காவல்துறையின் துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழப்பு

மோடியின் இரண்டு நாள் வங்கதேச பயணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டின் தலைநகர் டாக்காவில் போராட்டம் நடைபெற்றுள்ளது.  போராடியவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

வங்கதேசம் சுதந்திரம் அடைந்த ஐம்பதாவது ஆண்டு கொண்டாட்டம் மற்றும் வங்கதேசத்தின் தேசதந்தையும், தற்போதைய பிரதமர் ஷேக் ஹசீனாவின் தந்தையுமான ஷேக் முஜிபூர் ரகுமானின் நூற்றாண்டு விழாவில் பங்கேற்க இரண்ட நாள் பயணமாக மோடி வங்கதேசம் சென்றுள்ளார்.

மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹெபசாத்-இ-இஸ்லாம் என்ற அமைப்பினர் தலைநகர் டாக்காவில் போராட்டம் நடத்தியுள்ளனர்.

பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்ட 345 மீனவர்கள் – குஜராத் அரசு தகவல்

டாக்காவின் முக்கிய மசூதியில் உள்ள பகுதியில் நடைபெற்ற ஆர்பாட்டக்காரர்களை கலைந்து போக கண்ணீர் புகை குண்டுகள் மற்றும் ரப்பர் குண்டுகளைக் காவல்துறையினர் பயன்படுத்தினர். இதனையடுத்து ஏற்பட்ட இரு குழுக்களுக்கும் இடையே மோதல் வெடித்ததாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

ஆர்ப்பாட்டத்தை ஒடுக்க நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் குண்டு காயங்களுடன் 8 பேர் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டதாகவும், அதில் 4 பேர் உயிரிழந்துவிட்டதாகவும், முகமது அலாவுதீன் என்ற காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

Source : Aljazeera

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்