Aran Sei

மும்பையில் மின்வெட்டு ஏற்பட்டதிற்கு சீன வைரஸ்தான் காரணம் – அமைச்சர் அனில்தேஷ்முக் தகவல்

ந்தியாவின் பொருளாதார தலைநகரான மும்பையில் கடந்த அக்டோபர் 12 அன்று மிகப்பெரிய மின்வெட்டு ஏற்பட்டது. இந்த மின்வெட்டினால் மும்பை நகரமே ஸ்தம்பித்தது.

தற்போது இந்த மின்வெட்டு சீன பின்புலம் உள்ள ஹேக்கர்களால் (Hacker), திட்டமிட்டு நடத்தப்பட்ட சதியென மஹாராட்ரா மாநிலத்தின் உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் தெரிவித்துள்ளார். ஆனால், மகாராஷ்டிரா மாநில மின்வாரிய துறையோ இதை முற்றிலுமாக மறுத்திருக்கிறது.

இது தொடர்பாக, தி வயர் வெளியிட்டுள்ள செய்தியில், மும்பையில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த அந்த மாநிலத்தின் உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக், அக்டோபர் 12 அன்று நடந்த மிகப்பெரிய மின் வெட்டிற்கு, மகாரஷ்டிர மாநில மின்வாரிய துறையின் கணினி வழங்கிகளுக்கு (SERVER), வெளிநாட்டிலிருந்து வைரஸ் ஒன்று அனுப்பபட்டதே காரணம் என்று குறிப்பிட்டிருந்தார் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், அவரது பேட்டியில் நியூயார்க் டைம்ஸ் நாளிதழில் வெளியான ஃபியூச்சர் ரிப்போர்ட் (FUTURE REPORT) என்ற அறிக்கையை சுட்டிக்காட்டி, 14-ட்ரோன்ஜன் (Trojan) என்ற வைரஸ் மின்வாரிய இணையத்திற்குள் பரப்பட்டதாலே, மின்வெட்டு நடந்திருக்கக் கூடும் எனவும், அதுமட்டுமில்லாமல் 8GB அளவுள்ள, அடையாளம் தெரியாத கோப்பு ஒன்று, அதன் இணையத்தில் பதிவேற்றப்பட்டதாகவும், மகாரஷ்டிர மாநில மின் வாரிய துறை இணையத்தை தடைசெய்யப்பட்ட IP முகவரிகள் கொண்ட கணினிகள் முலம் இயக்க வாய்ப்புகள் இருப்பதாகவும் , அதனால் இந்த மின்வெட்டு ஹேக்கர்களின் சதி திட்டத்தால் மட்டுமே நடக்க வாய்ப்புகள் இருந்திருக்கிறது என்று தெரிவித்திருந்தார் என்று அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த சந்திப்பின் போது உடனிருந்த அந்த மாநிலத்தின் மின்வாரிய துறை அமைச்சர் ரவுட் ” இந்த அறிக்கையை படித்துவிட்டு பதிலளிப்பதாகவும், இது குறித்து சட்டசபையில் பேசுவேன்” என்றும் குறிப்பிட்டார். ஆனால் அமைச்சர்களின் இந்த பேட்டியை அந்த மாநிலத்தின் மின்வாரிய துறை இதை முற்றிலுமாக மறுத்திருக்கிறது.

இது குறித்து செய்தி வெளியிட்டுள்ள அம்மாநிலத்தின் மின்சாரத்துறை “மின்வெட்டிற்கும் நியூயார்க் டைம்ஸ் வெளியிட்ட அறிக்கைக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்றும், மின்வாரிய துறையின் இணையத்தில் எந்த பதிவேற்றமோ அல்லது பதிவிறக்கமோ நடைபெறவில்லை எனவும், இது முழுக்க முழுக்க அதிகாரிகளின் உத்தரவின் படி நடைபெற்ற ஆயத்த பணிகள் மட்டும்தான்” என்று கூறியதன் மூலம் அமைச்சரின் கருத்தை முற்றிலுமாக மறுத்துள்ளது.

மேலும், இந்த செய்தி குறித்து பதிலளித்துள்ள சீன வெளிவுறவு துறையின் செய்தி தொடர்பாளர் இதை முற்றிலுமாக மறுத்துள்ளதுடன், சீனா இது போன்ற இணைய வைரஸ் பரப்புவதை ஒரு போதும் ஆதரிக்காது என்றும் கூறியுள்ளார்.

இந்த மின்வெட்டை மகாரஷ்டிர மாநில மின்சாரத் துறை தற்செயல் நிகழ்வு என்று கூறியுள்ள நிலையில் அமைச்சரின் இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது

ரெட் எக்கோ என்ற சீன பின்புலம் உடைய ஹேக்கர்களின் குழு, இந்தியாவில் உள்ள 10 முக்கிய மின்சார நிறுவனங்களில் கணினி வைரசை பரப்ப திட்டமிட்டிருப்பதாகவும், குறிப்பாக ஐந்து முக்கிய மின்பகிர்வு நிலையங்களையும், இரண்டு துறைமுகங்களிலும் இதை செய்ய திட்டமிட்டிருப்பதாகவும், மும்பையில் நடந்த இந்த மின்வெட்டு இந்தியாவை அச்சுறுத்த நடந்த ஒரு முன்மாதிரி நிகழ்வுதான் என்றும், சீன எல்லையில் இந்தியா தனது நடவடிக்கைகளை குறைக்காவிட்டால், இதை விட மோசமாக தாக்குதல் நடத்த படலாம் என்றும் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் வெளியாகியுள்ள ஃபியூச்சர் ரிப்போர்ட் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்