பிறந்து 21 மாதமான பெண் குழந்தைக்கு முதுகு தண்டுவட சிதைவு நோய் ஏற்பட்டுள்ளதால் குணப்படுத்த 16 கோடி ரூபாய் தேவைப்படுகிறது.
தஞ்சாவூர், நாஞ்சிக்கோட்டை சாலை சீராஜ்பூர் நகரை சேர்ந்தவர் ஜெகதீஸ், ரெப்கோ வங்கியில் உதவி மேலாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி எழிலரசி, ரெப்கோ வங்கியில் உதவியாளராகப் பணியாற்றி வருகிறார். இவர்களது மகள் பாரதி பிறந்து 21 மாதம் ஆகிறது.
சிறுமிக்கு கடந்த 9ம் தேதி முதுகு தண்டுவட தசை நார் சிதைவு என்ற நோய் இருப்பது மருத்துவர்களால் கண்டறியப்பட்டது. சிறுமி இதுவரை தவழ்ந்த நிலையில், தானாக எழுந்து நிற்க முடியாத நிலை இருந்து வருகிறாள். சிறுமியைப் பரிசோதித்த டாக்டர்கள், இவருக்கு, ‘ZOLGENSMA’, என்ற ஊசி மருந்து செலுத்தினால் மட்டுமே குணப்படுத்த முடியும், மருந்தின் விலை 16 கோடி ரூபாய், அதை இறக்குமதி வரி 6 கோடி என 22 கோடி ரூபாய் செலவாகும் என கூறியுள்ளனர். சிறு உதவியும் அக்குழந்தையைக் காப்பாற்றும் என்பதால் உதவி கோரியுள்ளனர். குழந்தையின் தந்தையைத் தொடர்புகொள்ள 9791793435 எண்ணை தொடர்புகொள்ளவும். இதே நோயால் பாதிப்புற்ற ருத்ரா எனும் குழந்தைக்கு உதவி கிடைத்து குணமடைந்துள்ளார் என்பது நினைவுகூரத்தக்கது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.