இலங்கையின் மின் திட்டத்தை அதானி குழுத்திற்கு வழங்க இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவை பிரதமர் மோடி நிர்பந்தித்ததை தொடர்பாக ஆதாரத்தை நாட்டு நிதி அமைச்சகத்தின் ஆவணம் உறுதி செய்துள்ளது.
வடக்கு கடற்கரையில் 500 மெகாவாட் காற்றாலை மின் நிலையத்தை அமைப்பதற்கு அதானி குழுமம் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டது என்பது குறித்து இலங்கை மின்சார வாரியத்தின் தலைவர் எம்எம்சி பெர்டினாண்டோவிடம் இலங்கையின் பொதுத் துறை நிறுவனங்களுக்கான நாடாளுமன்றக் குழு விசாரணை நடத்தியது.
அதில், ”நவம்பர் 24, 2021 தேதி, ஒரு கூட்டத்திற்கு பிறகு என்னை அழைத்த அதிபர் கோத்தயப ராஜபக்சே, மின் திட்டத்தை அதானிக்கு வழக்குமாறு இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி அழுத்தம் கொடுப்பதாக கூறினார்” என்று வாக்குமூலம் அளித்தார்.
மின் திட்டத்தை அதானிக்கு வழங்க அழுத்தம் கொடுத்த மோடி – இலங்கை மின்சார வாரியத் தலைவர் வாக்குமூலம்
இதனைத் தொடர்ந்து தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த பெர்டினாண்டோ, பிரதமர் மோடி அழுத்த அளித்ததாக கூறிய கூற்றை திரும்ப பெறுவதாக தெரிவித்திருந்தார்.
அவருக்கு இருந்த அழுத்தின் காரணமாக அவர் இவ்வாறு தெரிவித்ததாக அவர் குறிப்பிட்டுருந்தார். மேலும், இந்த கருத்தைத் தெரிவித்த அடுத்த 24 மணி நேரத்தில் இலங்கை மின்சார வாரியத்தின் தலைவர் பதவியைப் பெர்டினாண்டோ ராஜினாமா செய்தார்.
பெர்டினாண்டோவின் கருத்தை மறுத்து இலங்கை அதிபர் கோத்தய ராஜபக்சே கருத்து தெரிவித்திருந்தார். மேலும், அதானி குழுமம் வெளியிட்டிருந்த அறிக்கையில், இது தொடர்பாக இலங்கை அரசாங்கம் விளக்கமளித்து விட்டதாக குறிப்பிட்டிருந்தது.
இந்நிலையில், இலங்கை நிதியமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ ஆவணம் ஒன்றை தி வயர் இணையதளம் வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தேதியிட்ட அந்த ஆவணம், நாடாளுமன்ற குழு முன்பு பெர்டினாண்டோ அளித்த வாக்குமூலம் உண்மை என்பதை உறுதி செய்கிறது.
நவம்பர் 25, 2021 தேதி, இலங்கையின் நிதியமைச்சகத்திற்கு அப்போதை இலங்கையின் மின்சார வாரியத்தின் தலைவராக இருந்த பெர்டினாண்டோ கடிதம் எழுதியுள்ளார்.
இலங்கை: அதானிக்கு வழங்கப்பட்ட மின் திட்டம் – எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபடும் மக்கள்
”அந்த கடிதத்தில், அதானி குழுமத்தின் முதலீட்டை, இந்திய அரசின் திட்டமாக கருதுமாறு அப்போதை பிரதமர் மகிந்தா ராஜபக்சே கூறியதாக குறிப்பிட்டுள்ளர்.
மேலும், நவம்பர் 16, 2021 தேதி, இலங்கை அதிபர் கோத்தய ராஜபக்சே உடனான சந்திப்பின்போது, 500 மெகாவாட் மின் திட்டத்தை உருவாக்க அதானி குழுமத்திற்கு வசதி ஏற்படுத்துமாறு கேட்டுக் கொண்டார் என்று தெரிவித்துள்ளார்.
அதானியின் திட்டத்திற்கு இந்திய அரசு ஆதரவளித்திருப்பதால், இது இரண்டு நாட்டு அரசாங்கங்களுக்கு இடையிலான திட்டம் என்று கருதியதாகவும் அந்த கடிதத்தில் பெர்டினாண்டோ குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவில் காலநிலை அகதிகள் முதல் ஆஸ்திரேலியாவில் தஞ்சமடையும் இலங்கை அகதிகள் வரை – தமிழ்ப் பிரபாகரன்
இந்திய தொழிலதிபர்களுக்கு வெளிநாட்டு ஒப்பந்தங்கள் கிடைக்க பிரதமர் மோடி உதவிகிறார் என்ற குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இரண்டாவது சம்பவம் தற்போது அரங்கேறியுள்ளது.
முன்னதாக, ரஃபேல் விமான ஒப்பந்தத்தை அணில் அம்பானிக்கு வழங்க பிரதமர் மோடி தான் முடிவெடுத்தார் என்று அப்போதை பிரான்ஸ் அதிபர் பிரான்கோய்ஸ் ஹாலண்ட் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Source: The Wire
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.